கேரளாவில் மூளை உண்ணும் அமீபா ; ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு !! அமைச்சர் எச்சரிக்கை

3 weeks ago 2
ARTICLE AD

கேரளாவில் மூளை உண்ணும் அமீபா ; ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு !! அமைச்சர் எச்சரிக்கை

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்கத்தில் சமுதாய நல செவிலியர்கள்,  அலுவலக கண்காணிப்பாளர்களுக்கான பதவி உயர்வு, ஆய்வக நுட்பனர்களுக்கான (நிலை-3) பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு 220 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

பின்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் ;

பொது சுகாதாரத் துறையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றிய வருவதாகவும்
அனைத்து நிலைகளிலும் மருத்துவத் துறையில் வெளிப்படை தன்மை கடைபிடிக்கப்பட்டு பணியாளர்களின் நலன் காக்கும் அரசாக திமுக அரசு உள்ளது. சமுதாய நல செவிலியர்கள் 160 பேருக்கு பதவி உயர்வும், அலுவலக கண்காணிப்பாளர்கள் 10 பேருக்கு பணி உயர்வும், ஆய்வக நுட்பநர்கள் 50 பேருக்கு பணி நியமன ஆணைகளும் வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவத் துறையில் எம்.ஆர். பி, டி.என்.பி.எஸ்.சி, உள்ளிட்ட பல்வேறு நியமனம் மூலம் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 35,702 பேர் பணி நியமனம் பெற்று உள்ளதாகவும், திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை 43,165 பேர் பணியிடை மாறுதல் பெற்றுள்ளனர் என்றும்
மருத்துவத் துறையில் 15,566 பேர் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

அமீபா - ஐயப்ப பக்தர்கள் அச்சப்பட தேவையில்லை

கேரளாவில் மூளையை தின்னும் அமீபா நோய் தொற்று அதிகரித்து வருவது தொடர்பாக தமிழ்நாட்டில் இரண்டு மாதத்திற்கு முன்பாகவே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இது குறித்தான வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறதுஐயப்ப பக்தர்கள் அச்சப்படத் தேவையில்லை

நீட் விலக்கு - சட்ட போராட்டம் தொடரும்

நீட் மசோதாவிற்கு ஆளுநர் பல மாதங்கள் கிடப்பில் போட்டு வைத்திருந்ததால் மீண்டும் சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நீட் மசோதாவிற்கு விலக்கு தர வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமரிடம் இரண்டு முறை வலியுறுத்தியதாகவும் , தவிர்க்கவே முடியாத காரணத்திற்காக நீட் மசோதாவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார்.

குடியரசுத் தலைவர் உள்துறைக்கு நீட் மசோதாவை அனுப்பி பலமுறை தமிழ்நாட்டில் கருத்துக்களை கேட்ட பிறகு தமிழ்நாடு அரசின் நீட் மசோதாவிற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்துள்ளதாகவும்
குடியரசு தலைவர் நீட் சட்ட மசோதாவை நிறுத்தி வைத்ததுக்கு எதிராக தமிழ்நாடு அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. நீட்டுக்கு எதிரான சட்டப் போராட்டத்தை முதலமைச்சர் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார் என கூறினார்.

Read Entire Article