தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் தாக்கம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகிறது. இந்த நிலையில் கேரளாவில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்,

கேரளாவில் மீண்டும் கடும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக மத்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தென்னிந்தியாவில், குறிப்பாக தெற்கு தமிழ்நாடு மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் மேலடுக்கு மண்டலத்தில் உருவான சுழற்சி காரணமாக ஏற்படுகிறது. இந்த சூழ்நிலை காரணமாக, ஆகஸ்ட் 3 முதல் 7 வரை கேரளாவின் பல மாவட்டங்களில் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆரஞ்சு எச்சரிக்கைக்கு உட்பட்ட பகுதிகளில் தனித்தனியாக மிக கனமழை (115.6 mm முதல் 204.4 mm வரை) பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அடுத்த நான்கு நாட்களுக்கு மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நாளை பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும், திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம். பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் ஆகஸ்ட் 5, நாளை பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம்.

மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு பகுதியிலும், ஆகஸ்ட் 7, 2025 கண்ணூர், காசர்கோடு. பொது மக்கள் என்ன செய்ய வேண்டும் மழை அதிகமுள்ள நேரங்களில் பாதுகாப்பான இடங்களில் தங்க வேண்டும். நதிக்கரைகள், அடிவார பகுதிகள் மற்றும் மலைச்சரிவுகளில் செல்ல வேண்டாம். மின் கம்பிகள், மரங்கள் மற்றும் கடுமையான காற்று ஏற்படும் பகுதிகளை தவிர்க்கவும். மழை நிலை மேலும் தீவிரமாவதற்கான வாய்ப்புகள் உள்ள நிலையில், மக்கள் எச்சரிக்கையாக இருக்க மத்திய மற்றும் மாநில அரசு அவசர மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.

மேலும் தகவல்களுக்கு, மாநில பேரிடர் மேலாண்மை மையத்தின் (KSDMA) இணையதளத்தையும் வானிலை மையத்தின் பதிவுகளையும் பார்வையிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் தமிழ்நாட்டிலும் தென்மேற்கு பருவமழை வேகமெடுக்க தொடங்கி உள்ளது. சென்னை உள்பட சில மாவட்டங்களில் இன்று மாலையில் கனமழை பெய்தது. இதன் காரணமாக தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் குளம் போல் வெள்ள நீர் தேங்கியது.