இந்தியாவின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கேரளா, இயற்கை வளம், நதிகள், நீரோட்டங்கள், பசுமை வயல்கள், மற்றும் மலைகளால் அழகுறும் இந்த மாநிலம், சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பிரபலமான இடமாக இருக்கிறது. மலைநாடான இடுக்கி, தேயிலை தோட்டங்களால் பிரசித்தி பெற்ற மூணார் பழங்கால ஹெரிடேஜ் நகரமான கோழிக்கோடு, நீர்வேலி காட்சிகளுக்காக புகழ்பெற்ற அலப்புழா ஆகியவை முக்கிய சுற்றுலா தலங்கள் ஆகும். கேரளாவில் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகள் மிகவும் முன்னேறியுள்ளன. நாட்டின் மிக உயர்ந்த கல்வியுடன் கூடிய மாநிலம் இதுவாகும். மலையாளம் இந்த மாநிலத்தின் முக்கிய மொழியாகும். கடற்கரை, பாக் வாட்டர்கள், ஆராய்ச்சி நிலங்கள், மற்றும் பாரம்பரிய கலாச்சாரம் அனைத்தும் ஒன்றாக இணைந்து, கேரளாவை ஒரு தனித்துவமான மாநிலமாக மாற்றுகிறது.

இந்த நிலையில், கேரள மாநிலம் எர்ணாகுளம் பனம்பில்லி நகர் கஸ்தூர்பா நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஃபுட் ஸ்ட்ரீட், சுவையும் சுகாதாரமும், பாதுகாப்பும், ஊட்டச்சத்தும் ஆகியவற்றை ஒருங்கே வழங்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம், மத்திய அரசின் 100 ஃபுட் ஸ்ட்ரீட்களை மேம்படுத்தும் தேசிய திட்டத்தின் ஒரு பகுதியாக செயல்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில், இந்த முயற்சி கிரேட்டர் கோச்சி டெவலப்மெண்ட் அத்தாரிட்டி , கோச்சி மாநகராட்சி, நேஷனல் ஹெல்த் மிஷன், மற்றும் மாநில உணவு பாதுகாப்புத் துறை ஆகியவற்றின் கூட்டாண்மையாக செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஃபுட் ஸ்ட்ரீட்டின் முக்கிய நோக்கம், தெரு உணவு பற்றிய மக்களின் எண்ணத்தை மாற்றுவதாகும். சுவை மட்டுமல்லாமல், சுத்தமான சூழல், சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் உணவு பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்வதே இதன் தனித்துவம். கேரளாவின் சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் இதை திறந்து வைத்து பேசுகையில், கேரளாவை உலக மக்கள் பாதுகாப்பாகவும் சுவையாகவும் உணவு அனுபவிக்கக் கூடிய உணவு தலமாக மாற்றுவதே எங்கள் நோக்கம்.

இதுவே அதன் தொடக்கம் எனக் கூறினார். இந்த திட்டம் மத்திய அரசின் 60% நிதி, மாநிலத்தின் 40% பங்கு, மேலும் ஜி.சி.டி.ஏ-வின் ரூ.30 லட்சம் நிதியுதவி ஆகியவற்றின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. கஸ்தூர்பா நகர் ஃபுட் ஸ்ட்ரீட்டில்,புதிதாக ஆவியில் வேகவைக்கும் புட்டு, அப்பம், காரமான கடல் உணவுகள், சைவ உணவுகள், பழச்சாறுகள், ஆரோக்கிய பானங்கள், நவீன ஃப்யூஷன் ஸ்ட்ரீட் உணவுகள் வரை பரிமாறப்படுகின்றன.அனைத்து உணவுகளும் சான்றளிக்கப்பட்ட விற்பனையாளர்களின் சுத்தமான சமையலறைகளில், தரமான பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. உணவு பாதுகாப்புத் துறையின் காலமுறை ஆய்வுகள் மூலம் சுகாதாரம் உறுதி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

GCDA தலைவர் கூறுகையில், பாதுகாப்பு, மலிவு விலை, வகைகள் ஆகிய மூன்றையும் இணைக்கும் நகர உணவு கலாச்சாரத்தின் முன்னோடி மாதிரி இதுவாக இருக்கும் எனக் குறிப்பிட்டார். இதன் மூலம் கொச்சியில் தொடங்கியுள்ள முயற்சி, அடுத்த கட்டமாக திருவனந்தபுரம், கோழிக்கோடு போன்ற நகரங்களில் விரைவில் விரிவுபடுத்தப்படும் என அமைச்சா் வீணா ஜார்ஜ் உறுதியளித்தார். கொச்சியில் தொடங்கியுள்ள இந்த முதலாவது ஃபுட் ஸ்ட்ரீட், கேரளாவின் உணவு கலாச்சாரத்தை உலக தரத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியின் ஆரம்ப கட்டமாக கருதப்படுகிறது. சுவை, சுகாதாரம், பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கே கொண்ட இந்த திட்டம், எதிர்காலத்தில் கேரளாவை உலக உணவு துறையில் முன்னணி மாநிலமாகும்.