கேது தசை தரும் பலன்கள் : உங்களுக்கு ஒரு வேலை கேது தசை நடந்தால்? பலன்களை கணிப்பது எப்படி?

1 year ago 6
ARTICLE AD

கேது தசை தரும் பலன்கள் :

அன்பார்ந்த ஏபிபி நாடு வாசகர்களே! உங்களுக்கு ஒரு வேலை கேது தசை நடக்கலாம் அல்லது நடக்க இருக்கலாம் அல்லது நடந்து இருக்கலாம் இப்படி எப்படி இருந்தாலும் நான் தற்போது கூறப்போகின்ற கேது தசையின் 9 புத்திகளையும்  தெரிந்து வைத்துக் கொள்வது அவசியமாகிறது. காரணம் புரிந்து கொள்ள முடியாத கேதுவின் தன்மைகளை பற்றி நாம் பலன்களை கணிப்பது என்றும் கடினமான ஒன்றாகும். இப்படியான சூழ்நிலையில் ஒருவருக்கு கேது தசை ஆரம்பம் ஆகிறது என்று வைத்துக் கொண்டால் நாம் எதை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம் எனக்கு என்ன நடக்கிறது என்பது தெரியாத அளவிற்கு அவர்களை கண்மூடித்தனமாக எங்கேயோ கொண்டு போய் கொண்டு இருக்கும். இப்படியான சூழ்நிலையில் தான் நான் கூறப்போகின்ற பலன்கள் உங்களுக்கு கை கொடுக்கலாம்  வாருங்கள் கேது தசையின் அனைத்து புத்திகளை பற்றிய பலன்களை பார்க்கலாம்.

கேது புத்தி ( 147 நாட்கள் ) :

மனைவியாலும் மக்களாலும் உறவினர்களாலும் பல வகையான தொல்லைகள் ஏற்படும். அதன் காரணமாக மனதில் விரக்தி உண்டாகும். கேது ஒன்பதாம் வீட்டு அதிபதியுடன் சேர்ந்தால் விவசாய மூலமாக நிறைய லாபம் கிட்டும்.   பொன்னும் பொருளும் சேரும்.

சுக்கிர புத்தி ( 420 நாட்கள் ) :

மனைவியின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். புத்திர பாக்கியம் கிட்டும். புது வாகனம் வாங்க முடியும்.   நினைக்கும் காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும். சுக்கிரன் நீச்சம் பெற்று அமர்ந்தால் அரசாங்க விரோதம் ஏற்படும்.  தன தானியம் நாசமாகும்.

சூரிய புத்தி ( 126 நாட்கள் ) :

பொன் பொருள் யாவற்றையும் இழந்து வெளிநாடுகளில் சென்று வாழ நேரிடும்.   ஓரளவு கையில்  பணம்  சேரும்.   வெளிநாட்டில் வசிப்பவர்கள் சொந்த நாடு திரும்பி வருவதற்கு வாய்ப்புகள் கிடைக்கும்.   சனி 3 6 அல்லது 10-ஆம் இடத்தில் அமர்ந்தால் நன்மையான பலன்கள் நடைபெறும்.

சந்திர புத்தி ( 210 நாட்கள் ) :

பெண்கள் மூலமாக விவகாரங்களும் பொருளும் விரயம் ஏற்படும்.  புத்திர புத்திரிகள் வியாதிகளால் பாதிக்கப்படுவார்கள். வாகன விருத்தி ஏற்படும். பொன் பொருள்கள் சேரும். பல கஷ்டங்கள் ஏற்பட்டாலும் உடனுக்குடன் நிவர்த்தியாகும்.

செவ்வாய் புத்தி ( 147 நாட்கள் ) :

பல வகையான நஷ்டங்களும் பொருள் விரையமும் உண்டாகும். பெண்கள் மூலமாக சில விரயங்களும் எதிரிகளால் தொல்லைகளும் உண்டாகும்.   நெருப்பால் ஆபத்து ஏற்படும். செவ்வாய் உச்சம் பெற்று அமர்ந்தால் பயிர் தொழில் மூலமாக நிறைய லாபம் கிட்டும். வசதியான வாழ்க்கை அமையும்.

ராகு புத்தி ( 378 நாட்கள் ) :

தன் குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு பல வகையான துன்பங்கள் ஏற்படும்.   தந்தைக்கு அர்த்தம் உண்டாகும்.   பொருள் விரயமாகும். சொத்துக்கள் அழிந்து போகும். ராகு சுப கிரகங்களால் பார்க்கப்பட்டால், மீசர்களுடைய தொடர்பால் லாபம் கிட்டும் பலவகையான நன்மைகளும் ஏற்படும்.

குரு புத்தி ( 336 நாட்கள் ) :

அரசாங்கம்  ஆதரவு கிட்டும். மனைவியால் ஆதாயங்களும் கிட்டும். வருமானம் பெறும். வீடு நிலம் பொன் ஆபரணங்கள் புது வாகனம் போன்றவை சேரும். பல வெற்றிகளை எளிதாக தேடிக் கொள்ள முடியும். குரு பாவ கிரகங்களால் பார்க்கப்பட்டால் கண் சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிப்பு உண்டாகும். நெருப்பால் ஆபத்து ஏற்படும். நண்பர்கள் பகைத்துக் கொள்வார்கள்.

சனி புத்தி ( 399 நாட்கள் ) :

கையில் உள்ள பொருளும் அசையா சொத்துக்களும் விரையம் ஆகும். சொறி சிரங்கு தேமல் போன்றவற்றால் தொல்லை உண்டாகும்.   மனதில் பலவகையான சந்தோஷங்கள் தலைதூக்கும். குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு சில வகை தொல்லைகள் ஏற்படும். சனி மூலத்திரிகோணங்களில் அமர்ந்தால் ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். வருமானம் மெதுவாக பெருகும்.

புதன் புத்தி ( 357 நாட்கள் ) :

போதிய வருமானம் இல்லாததால் தன் சொந்த ஊரை விட்டு வேறு ஊருக்கு செல்ல நேரிடும். நண்பர்களாலும் உறவினர்களாலும் ஆபத்து உண்டாகும் புத்திரர்களால் வீண் செலவு ஏற்படும். எந்த காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும். புதன் உச்சம் ஆட்சி பெற்று அமர்ந்தால் நன்மையான பலன்கள் நடைபெறும். வாகன யோகம் ஏற்படும்.

மேலே சொன்ன கேது தசைகளின் பலன்கள் அனைத்தும் பொது பலன்களே ஒருவர் ஜாதகத்தில் கேது எந்த வீட்டில் அமர்கிறார் என்பதை பொறுத்து பலன்கள் சற்று மாறுபடலாம். அதேபோல கேது நல்ல வீடுகளில் அமர்ந்து ஜாதகருக்கு நல்ல யோகங்களை கொண்டு வருவதோடு அதிர்ஷ்டகரமான வாழ்க்கையையும் கொண்டுவரும். கேது தசை நடப்பவர்கள் முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபட சங்கடங்கள் தீரும் வாழ்க்கையில் சந்தோஷம் பெருகும்.

Read Entire Article