கூலி திரைப்படம் வெளியாகி ஆறு மாதங்கள் கடந்தாலும் அப்படம் குறித்த பேச்சு இன்னும் ஓயவில்லை. படம் வசூல் ரீதியாக வெற்றிபெற்றதாக தயாரிப்பு நிறுவனம் சார்பாக தெரிவித்தாலும் இப்படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. கூலி படம் குறித்து ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா தனது கருத்தை பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டார்.

திரைப்படங்களில் டைட்டில் மற்றும் கிராஃபிக் டிசைனிங்கில் பணியாற்றி வந்த செளந்தர்யா ரஜினிகாந்த் , வெங்கட் பிரபு இயக்கிய கோவா திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். தனது தந்தை ரஜினிகாந்தை வைத்து இந்தியாவில் முதல்முறையாக மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தை வைத்து கோச்சடையான் படத்தை இயக்கினார். தற்போது அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடித்துள்ள வித் லவ் திரைப்படத்தை செளந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்துள்ளார். இப்படம் வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் ப்ரோமோஷனின் போது கூலி படம் குறித்து அவர் பேசினார்.

கூலி படம் குறித்து செளந்தர்யா ரஜினிகாந்த்

ரஜினி நடித்த படங்களில் தனக்கு தளபதி , பாட்ஷா , படையப்பா ஆகிய படங்கள் தனக்கு ரொம்ப பிடிக்கும் என்று செளந்தர்யா கூறினார். ரஜினி நடித்த படங்களில் சிவாஜி படத்திற்கு 10/10 மதிப்பெண் கொடுப்பேன் என்று அவர் கூறினார். கூலி படம் குறித்து பேசியபோது. " நான் என் அப்பாவின் ரசிகை . அவரது ரசிகையாக நான் ரஜினியை இன்னும் கூடுதலாக பார்க்க ஆசைப்பட்டேன். அதே நேரத்தில் தற்போது வெளியாகும் படங்களில் காட்டப்படும் வண்முறை காட்சிகளை மக்கள் அவ்வளவு விரும்பி பார்க்கவில்லை என்பது என் எண்ணம். கூலி படத்தைப் பொறுத்தவரை அப்படத்தின் கடைசி பத்து நிமிட ஏஐ காட்சி எனக்கு ரொம்ப பிடித்தது. " என்று அவர் கூறினார்.