குட்டையில் விஷம் கலந்த மர்மநபர்கள்: ஒரு டன் எடையிலான மீன்கள் செத்து மிதந்தன

3 months ago 8
ARTICLE AD

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே மீன்கள் வளர்க்கப்பட்ட குளத்தில் மர்மநபர்கள் விஷம் கலந்ததால் ஏறத்தாழ ஒரு டன் எடையிலான மீன்கள் செத்து மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் மதிப்பு ரூ.2.50 லட்சம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அகராத்தூர் வடக்குத் தெருவை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் முருகானந்தம் (59). இவர் அப்பகுதியில் மீன் வளர்ப்பு பண்ணை நடத்தி வருகிறார். இவரது மீன் வளர்ப்பு குளத்தில் ரோகு, மிருகால், கட்லா, புல்கெண்டை, வவ்வால் மீன் குஞ்சுகளை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு குளத்தில் விட்டு வளர்த்து வந்தார். கடந்த ஒரு வருடத்தில் இந்த மீன்கள் நன்கு வளர்ந்து இருந்தன.

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் மாட்டுப் பொங்கல் அன்று மீன் விற்பனை அதிகளவில் இருக்கும் என்பதால் அப்போது மீன் அறுவடை செய்து கொள்ளலாம் என்று முருகானந்தம் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 6ம் தேதி வழக்கம் போல் மீன் பண்ணைக்கு சென்று மீன்களுக்கு உணவளித்து விட்டு திரும்பினார். இந்நிலையில் இந்த மீன் குட்டையில் மர்மநபர்கள் விஷத்தை கலந்துள்ளனர். இதனால் இதில் வளர்ந்து வந்த மீன்கள் செத்து மிதந்துள்ளன.

இதுகுறித்து அறிந்த முருகானந்தம் மீன் பண்ணைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது குட்டையில் இருந்த சுமார் ஒரு டன் எடையுள்ள மீன்கள் அனைத்து செத்து மிதந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதன் மதிப்பு சுமார் ரூ.2.50 லட்சம் என்று கூறப்படுகிறது. உடன் இதுகுறித்து கும்பகோணம் தாலுகா போலீசுக்கு முருகானந்தம் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்தை நேரில் வந்து பார்வையிட்ட தாலுகா போலீசார் இறந்த மீன்கள் மட்டும் மீன் குட்டையில் இருந்த விஷம் கலந்த தண்ணீரை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விவசாயத்திற்கு மாற்றாக மீன்கள் வளர்ப்பதில் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இதுபோன்று சமூக விரோதிகள் செயல்பாட்டால் பல மாதங்கள் கஷ்டப்பட்ட உழைப்பு அனைத்தும் வீணாகி போய் உள்ளது. மேலும் அந்த மீன் குட்டையில் உள்ள தண்ணீரை முழுமையாக பாதுகாப்பாக வெளியேற்றிய பின்னரே மீண்டும் தண்ணீர் விட முடியும், இதனால் பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read Entire Article