ஆன்மிக அரசியலுக்கு எப்படியெல்லாம் முட்டு கொடுத்தீங்க...ராகவா லாரன்ஸ் வீடியோ வைரல்

1 hour ago 1
ARTICLE AD

திருச்சி கிழக்கு இடைத் தேர்தலில் தவெக சார்பாக தான் போட்டியிடுவது குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் ஜூன் 11 ஆம் தேதி அறிவிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். தவெக ஆதரவாளர்கள் ராகவா லாரன்ஸூக்கு உற்சாக வரவேற்பு கொடுத்து வரும் நிலையில் அவரது பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 2018 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் கட்சித் தொடங்கியபோது அவரது கட்சிக்கு ஆதரவாக லாரன்ஸ் பேசிய வீடியோவை பகிர்ந்து நெட்டிசன்கள் தவெகவை எச்சரித்து வருகிறார்கள்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு இரு தொகுதிகளிலும் வெற்றிபெற்றார். முதலமைச்சராக பதவியேற்றப் பின் திருச்சி கிழக்கில் தனது எம்.எல்.ஏ பதவியை விஜய் ராஜினாமா செய்துள்ளார். இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தவெக சார்பாக யார் திருச்சி கிழக்கில் போட்டியிடப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. முன்னதாக தவெக சார்பாக திருமாவளவன் போட்டியிடுவார் என கூறப்பட்ட  நிலையில் திருமாவளவன் இந்த தகவலை மறுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து நடிகரும் சமூக சேயற்பாட்டாளருமான ராகவா லாரன்ஸ் போட்டியிடுவார் என கூறப்பட்டது.

ராகவா லாரன்ஸ் விளக்கம்

இது குறித்து ராகவா லாரன்ஸ் இன்று தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். " அனைவருக்கும் வணக்கம், நான் திருச்சி கிழக்குத் தேர்தலில் போட்டியிடுவது குறித்த செய்தி பல்வேறு ஊடகங்களில் பரவி வருகிறது. எனது ஊடக நண்பர்கள் அனைவரும் தொலைபேசியில் என்னைத் தொடர்புகொண்டு, இதுகுறித்து விளக்கம் கேட்டு என்னைச் சந்திக்கக் கோருகின்றனர். இந்த ஊகங்கள் ஒரு கட்டத்தில் இதற்குப் பதிலளிக்க வேண்டும் என்று நான் உணரும் அளவுக்கு வளர்ந்துவிட்டதால், இந்தக் குறிப்பைப் பகிர விரும்புகிறேன். நான் தற்போது 'பென்ஸ்' படப்பிடிப்பில் மும்முரமாக இருக்கிறேன், எனது படப்பிடிப்பு 10ஆம் தேதியுடன் முடிவடைகிறது. என் தாயின் ஆசீர்வாதங்களுடன், என் வாழ்க்கை குறித்த ஒரு முக்கிய முடிவு வரும் 11ஆம் தேதி, வியாழக்கிழமை காலை 9:30 மணிக்கு அறிவிக்கப்படும்." என தெரிவித்துள்ளார். இதன் மூலம் ராகவா லாரன்ஸ் தவெகவில் இணைவது உறுதியாகியுள்ளதாக கருதும் தவெக ஆதரவாளர்கள் அவருக்கு உற்சாகத்தோடு வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் கட்சித் தொடங்கியபோது அவரது கட்சிக்கு ஆதரவாக லாரன்ஸ் பேசிய வீடியோவை சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ரஜினிக்கு ஆதரவாக ராகவா லாரன்ஸ் பேசிய வீடியோ வைரல்

2018 ஆம் ஆண்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான் அரசியல் கட்சி தொடங்க இருப்பதை அறிவித்த போது அவரது ரசிகரான ராகவா லாரன்ஸ் தனது முழு ஆதரவை ரஜினிக்கு கொடுத்தார். ரஜினியின் ஆன்மிக அரசியல் பலரால் விமர்சிக்கப்பட்ட நிலையில் அதற்கு ஆதரவாக அவர் மேடையில் பேசினார். ஆன்மிக அரசியலை புரிந்துகொள்ள பெரிய ஞானம் வேண்டும் என்றும் அந்த ஞானம் தனது தலைவர் ரஜினியிடம் இருப்பதாக அவர் தெரிவித்தார்.  நாம் இந்த பிறவியில் செய்யும் நல்லது கெட்டதை வைத்தே நமது அடுத்த பிறவி அமையும் என சனாதன தர்மத்தை ஓட்டியும் அவர் இந்த வீடியோவில் பேசியுள்ளார். ரஜினி சார் சொல்வதைக் கேட்டால் தமிழ்நாட்டில் ரஜினி சாரின் தலைமையில் ஆட்சி அமையும். ரஜினி தொடங்கியிருப்பது கட்சி இல்ல புரட்சி என ராகவா லாரன்ஸ் பேசியுள்ளார்

Read Entire Article