குடும்ப பிரச்னையில் 3 குழந்தைகளின் தாய் தற்கொலை: கும்பகோணத்தில் பரபரப்பு

2 months ago 3
ARTICLE AD

கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே குடும்பப் பிரச்சினை காரணமாக பெண் ஒருவர் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்பகோணம் அருகே மாங்குடி வளையப்பேட்டை நடுத்தெருவைச் சேர்ந்தவர் சந்திரன். இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜோதி (36). இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகின்றன. தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த சில மாதங்களாக காய்கறி விற்பனை போதிய அளவில் நடைபெறவில்லை என கூறப்படுகிறது. இதனால் சந்திரன் கடந்த 2 மாதங்களாக வியாபாரத்திற்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாக தெரிகிறது. மேலும், குடும்பத்தில் கடன் தொல்லையும் இருந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்துக்கு முந்தைய நாள் ஜோதி தனது நகைகளை அடகு வைத்து பணம் கொண்டு வருமாறு கணவரிடம் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து அவர் நகைகளை பெற்றுக்கொண்டு அடகு வைத்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்துள்ளார். நகைகளை அடகு வைத்துவிட்டு வீட்டுக்கு திரும்பிய சந்திரன், வீட்டின் கதவு உள்பக்கம் பூட்டப்பட்டிருப்பதை பார்த்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அவர், கதவை உடைத்து வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளார்.

அப்போது ஜோதி வீட்டிற்குள் துப்பட்டாவால் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சந்திரன், உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஜோதியை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு ஜோதியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், ஜோதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடி மற்றும் தம்பதியினருக்கு இடையே ஏற்பட்டதாக கூறப்படும் தகராறு உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணமாகி 15 ஆண்டுகள் ஆன நிலையில், 3 குழந்தைகளை விட்டுவிட்டு பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read Entire Article