கிருஷ்ண ஜெயந்தி - தேதி மற்றும் பூஜை நேரங்கள்..!!!

கிருஷ்ண பகவானின் 5252 -வது பிறந்தநாள் விழா!!!

2025 இந்த ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி சனிக்கிழமை அன்று கிருஷ்ணர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருப்பவர்கள் ஆகஸ்ட் 15 இரவு முதல் விரதமிருந்து மதியம் விரதத்தை முடித்துக் கொள்ளலாம்... ஆகஸ்டு 16ஆம் தேதி மதியம் 12.04 முதல் 12.47 வரை சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்ளலாம்...

நம்ம வீட்டு கிருஷ்ணர்:

கோகுலாஷ்டமி தினத்தன்று குழந்தைகளின் பாத சுவடுகளை அச்சு எடுத்து வீட்டின் வெளியில் இருந்து வீட்டிற்குள் வரை இட்டு செல்வது...ahhhh கிருஷ்ணரே வீட்டிற்கு வந்தது போல ஐதீகம்...
அதிகாலையில் எழுந்து குளித்து வீட்டை சுத்தம் செய்துவிட்டு, அரிசி மாவால் கோலம் போட்டு மாவிலை தோரணங்களை கட்டி, பலகாரங்களை செய்து, கிருஷ்ணருக்கு படைத்து வழிபடுவார்கள்... வைணவ கோவில்களில் சிறப்பு பூஜைகளும் நடைபெறும்... குறிப்பாக இஸ்கான் கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா மிக விமர்சையாக நடைபெறுவது வழக்கம்... அந்தக் கோவில்களின் வழிபாடுகளிலும் நீங்கள் கலந்து கொள்ளலாம்...

கம்சனை கொன்ற கிருஷ்ணர் :

மக்களுக்கு எப்போதெல்லாம் துன்பம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் விஷ்ணு பகவான் அவதாரம் எடுத்து மக்களை காப்பாற்றுவார் அதர்மம் தலை தூக்கும் போதெல்லாம் தர்மத்தின் வழி நின்று மக்களை காத்து ரட்சிப்பார் அப்படிப்பட்ட அவரது அவதாரங்களில் முக்கியமானது கிருஷ்ணர் அவதாரம் அவர் அவதரித்த நாளையே கிருஷ்ண ஜெயந்தி என்று கொண்டாடி வருகிறோம்..

மதுரா நகரை ஆண்டு வந்த கம்சன் என்ற மன்னன் பல பாவங்களை செய்து மக்களை கொடுமைப்படுத்தி வந்திருக்கிறான் அவரை அழிப்பதற்காக வசுதேவருக்கும் தேவதைக்கும் எட்டாவது மகனாகப் பிறந்து கம்சனை வதம் செய்து மக்களை காப்பாற்றினார்... சிறு வயதாக இருக்கும் பொழுது கிருஷ்ணரை கொல்வதற்காக பல அரக்கர்களை ஏவி விட்டும் கிருஷ்ணரிடம் எதுவும் பலிக்காமல் போனது.. அத்தனை அரக்கர்களையும் தொம்சம் செய்து மக்களை காத்த ரட்சித்தார் நம் கோகுலத்து கிருஷ்ணன்…

கண்ணனை நம் வீட்டிற்கு அழைக்கலாம் :

கண்ணன் என்றால் கண் போல காப்பவன் முகுந்தன் என்றால் வாழ்வதற்கு இடம் அளித்து முக்தி அளிப்பவன் என்று அர்த்தம் நம்மை கண் போல காத்து வாழ்நாள் முழுவதும் நமக்கு வரக்கூடிய பிரச்சனைகளில் இருந்து நம்மை விடுவித்து இறுதிவரை நம்மோடு இருந்து குடும்பத்தையும் காத்து முக்தி கொடுப்பவனாக முகுந்தன் நம் மூச்சோடு கலந்து அவன் நம்முள்ளே பயணிக்க இந்த கிருஷ்ண ஜெயந்தியில் பாலகனாக அவரை நம் வீட்டிற்கு அழைக்கலாம்…

பூஜிப்பது எப்படி..?

கிருஷ்ணருக்கு வெண்ணை என்றால் மிகவும் பிடிக்கும் வீட்டில் பானைகளில் வெண்ணெய் வைத்து அதை நம் வீட்டு குழந்தைகளுக்கும் அக்கம் பக்கத்தினருக்கும் கொடுத்து மகிழலாம் பல வகையான பலகாரங்களை படைத்து உற்றார் உறவினர்களுக்கு கொடுக்கலாம் கிருஷ்ணரின் சிலைக்கு அல்லது படத்திற்கு பூக்களால் அலங்காரம் செய்து துளசி மாலையில் மங்களகரமாக பூக்கள் கட்டி கிருஷ்ணருக்கு சமர்ப்பிக்கலாம் பிடித்தமான இணைப்பு பலகாரங்களை வீட்டில் சமைத்து சாப்பிடலாம்.. மாலையில் அருகாமையில் இருக்கக்கூடிய கிருஷ்ண பகவானின் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து ஆனந்தம் அடையலாம்… கிருஷ்ணரின் பாடல்களை பஜனையில் பாடி மகிழலாம்… நமக்குத் தெரிந்த கிருஷ்ணர் அடியார்களுக்கு முடிந்த உதவிகளை செய்யலாம்…