கிராமப்புற ஆசிரியர்களுக்கு இலவச ஏஐ பயிற்சி: ஐஐடி சென்னை அறிவிப்பு! விண்ணப்பிப்பது எப்படி?

2 months ago 9
ARTICLE AD

கிராமப் புறங்களில் பணிபுரியும் பள்ளி ஆசிரியர்களுக்குச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து இலவசப் பயிற்சி அளிக்க சென்னை ஐஐடி-யின் பிரவர்தக் அமைப்பும், மத்திய கல்வி அமைச்சகத்தின் ஸ்வயம் பிளஸ் திட்டமும் இணைந்து ஒரு சிறப்பான முன்னெடுப்பைக் கையில் எடுத்துள்ளன.

வரும் பிப்ரவரி 5, 2026 அன்று தொடங்கவுள்ள இந்தப் பயிற்சி வகுப்பில் சேர, ஜனவரி 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யாருக்கு இந்தப் பயிற்சி?

ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகளில் பாடம் எடுக்கும் கிராமப்புற ஆசிரியர்களுக்காக ‘AI for Educators - K12 Teachers’ என்ற தலைப்பில் இந்தப் பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 40 மணி நேரம் நடைபெறும் இந்தப் பயிற்சியானது ஆங்கில வழியில் நடத்தப்படும்.

என்னென்ன கற்றுத் தரப்படும்?

வகுப்பறையில் பாடம் கற்பித்தலை நவீனமயமாக்க செயற்கை நுண்ணறிவை எப்படிப் பயன்படுத்துவது என்பதே இதன் முக்கிய நோக்கம். குறிப்பாக,

ஜெனரேட்டிவ் ஏஐ (Generative AI) கருவிகள்.

பாடம் திட்டமிடுதல் (Lesson Planning) மற்றும் கதை சொல்லலில் ஏஐயின் பங்கு.

மாணவர்களின் கற்றல் திறனை மதிப்பீடு செய்தல் (Assessment).

விர்ச்சுவல் ரியாலிட்டி (VR/ AR) மூலம் மாணவர்களை ஈர்த்தல்.
போன்ற பல நவீன தொழில்நுட்ப உத்திகள் ஆசிரியர்களுக்குக் கற்றுத்தரப்படும்.

கட்டணம் மற்றும் சான்றிதழ்

இந்த பயிற்சி முற்றிலும் இலவசம் ஆகும். எனினும் பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் முதல் 500 கிராமப்புற ஆசிரியர்களுக்கு சான்றிதழ் கட்டணம் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும். பயிற்சியின் முடிவில் ஆன்லைன் வழியாகத் தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு ஐஐடி சென்னை பிரவர்தக் சார்பில் சான்றிதழ் வழங்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?

ஆர்வமுள்ள ஆசிரியர்கள் https://iitmpravartak.org.in/AI_Educators_K12_teachers என்ற இணையதள முகவரியில் வரும் ஜனவரி 31-ம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும் என்று ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Read Entire Article