கின்னஸ் கனவுடன் கொண்டரங்கி மலையில் 1000 நாள்: ஒட்டன்சத்திரம் இளைஞரின் அசாத்திய சாதனை!

3 months ago 7
ARTICLE AD

செங்குத்தான குறுகலான பாதையில் வெறும் 20 நிமிடங்களில் 3825 அடி உயர மலையேறி, இரண்டு மணி நேரத்தில் 4 முறை வலம் வரும் இளைஞரின் கின்னஸ் நோக்கிய சாதனைப் பயணம் ஒட்டன்சத்திரத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

​திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம்,கீரனூர் அருகே புகழ்பெற்ற கொண்டரங்கி மலை அமைந்துள்ளது. சுமார் 3825 அடி உயரமும், 5000 படிக்கட்டுகளும் கொண்ட இந்த மலையானது மிகவும் செங்குத்தான மற்றும் குறுகலான பாதைகளைக் கொண்ட கடினமான மலையேற்றப் பகுதியாகும்.  இந்த மலையில், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகா, மூலனூர் மட்டப்பாறை புத்தூர் பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்ற இளைஞர் கடந்த மூன்று வருடங்களாகத் தொடர்ந்து  மலையேற்றச் சாதனையைச் செய்து வருகிறார். ​அதிவேகமாகச் செங்குத்து மலையில் ஏறும் திறமை கொண்ட இவர், வெறும் 20 நிமிடங்களில் இந்த மலையேறியும், 10 நிமிடங்களில் மலையிலிருந்து கீழே இறங்கியும் சாதனை படைத்து வருகிறார்.

அதுமட்டுமின்றி, இரண்டு மணி நேர இடைவெளிக்குள் தொடர்ந்து 4 முறை இந்த மலையேறி இறங்கி சாதனை படைத்துள்ளார். இத்தகைய கடினமான உடற்பயிற்சி மற்றும் ஆன்மிக மலையேற்ற முயற்சியில், இன்று தனது சாதனையின் முக்கிய மைல்கல்லாக 1000-வது நாளை அவர் வெற்றிகரமாகப் பூர்த்தி செய்தார். இளைஞர் கோபாலகிருஷ்ணனின் இந்த 1000-வது நாள் சாதனைக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, அவரை வரவேற்கவும் பாராட்டவும் திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் பெண்கள் என நூற்றுக்கணக்கானோர் கொண்டரங்கி மலை அடிவாரத்தில் திரண்டனர்.

மலையேறி வந்த அவருக்கு மலர் தூவியும், சால்வை அணிவித்தும் உற்சாகமாக வாழ்த்துக் கூறினர். இளைஞர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் கோபாலகிருஷ்ணனின் இந்த வெற்றிப் பயணம் தொடர வேண்டும் என்றும், அவர் விரைவில் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்றும் திரண்டிருந்தவர்கள் வாழ்த்தினர். மேலும், இந்த ஏழை இளைஞரின் அசாத்திய முயற்சியைக் கருத்தில் கொண்டு, தமிழக முதலமைச்சர் அவருக்கு உரிய அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என்றும், அவரது விளையாட்டு மற்றும் சாதனைத் திறனை ஊக்குவிக்கும் வகையில் அரசுப் பணி வழங்கி உதவ வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read Entire Article