காவி உடை.. வள்ளுவரை கலங்கப்படுத்தாதீங்க.. ஆளுநருக்கு அமைச்சர் அருண்ராஜ் கடும் கண்டனம்!

5 days ago 3
ARTICLE AD

திருவள்ளுவருவருக்கு காவி உடை அணிவிப்பது எந்தவொரு இடமென்றாலும் தவறு தான் என அமைச்சர் அருண்ராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருவள்ளுவர் திருநாள் விழா

லோக்பவனில் நடைபெற்ற திருவள்ளுவர் விழா சென்னை கிண்டியில் உள்ள லோக் பவனில் தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தலைமையில்  திருவள்ளுவர் திருநாள் கழகம் ஏற்பாடு செய்த திருவள்ளுவர் திருநாள் விழா (வைகாசி அனுஷம் வள்ளுவர் திருநாள்) விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வைக்கப்பட்ட பேனரில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டிருந்தது பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. அதுமட்டுமல்லாமல் காவி உடை, திருநீறு பட்டை அணிந்த திருவள்ளுவர் உருவப்படத்திற்கு ஆளுநர் அர்லேகர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது.

இந்த விவகாரத்தில் ஆளும் தவெக அரசை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார். கடந்த காலங்களில் திமுக ஆட்சியில் இருந்தபோது திருவள்ளுவருக்கு இதேபோல் காவி உடை அணிவிக்க முயன்ற சம்பவங்களுக்கு கடுமையான எதிர்ப்புகள் பதிவு செய்யப்பட்டது. மீண்டும் தமிழர்களின் சுயமரியாதையை உரசிப் பார்க்கும் வேலைகள் ஆளுநர் மாளிகையில் அரங்கேறி வருவதாக விமர்சித்திருந்தார். மேலும் ஏன் முதலமைச்சர் விஜய் சைலண்ட் மோடில் இருக்கிறார் என்ற கேள்வியையும் எழுப்பினார்.

அமைச்சர் அருண்ராஜ் கடும் கண்டனம்

இந்த நிலையில் ஆளுநர் மாளிகையில் நடந்த சம்பவத்திற்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர், “திருவள்ளுவர் உலகப் பொதுமறை தந்தவர். அவரை ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளோ அல்லது குறிப்பிட்ட அடையாளத்திற்குள்ளோ சுருக்குவது என்பது உலகளாவிய அவரது சிந்தனைகளை சிறுமைப்படுத்துவதற்குச் சமம்.

Also Read: ”வள்ளூவருக்கு காவி பெயிண்ட்.. கொள்கை எதிரியை கேள்வி கேட்க ஏன் தயக்கம்..” முதல்வர் விஜயை விமர்சித்த உதயநிதி

லோக்பவனில் (அல்லது எந்தவொரு அரசு/பொது இடங்களிலும்) திருவள்ளுவருக்குக் காவி உடை அணிவிப்பது தவறு! திருவள்ளுவர் எந்தவொரு மதத்திற்கும், சாதிக்கும், இனத்திற்கும், நாட்டிற்கும் தன்னைச் சுருக்கிக் கொள்ளவில்லை. அவரது ‘திருக்குறள்’ மனித குலம் முழுமைக்கும் பொதுவான வாழ்வியல் நெறிகளைப் பேசுகிறது.

கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் கூட அவர் ‘ஆதி பகவன்’, ‘மலர்மிசை ஏகினான்’, ‘அறவாழி அந்தணன்’ என்று பொதுவான சொற்களையே பயன்படுத்தினாரே தவிர, எந்தவொரு குறிப்பிட்ட மதக் கடவுளின் பெயரையும் அவர் குறிப்பிடவில்லை. அவரே தன்னை ஒரு பொதுவானவராக நிலைநிறுத்தும்போது, அவருக்கு ஒரு குறிப்பிட்ட மதத்தின் அடையாளமாகப் பார்க்கப்படும் வண்ணத்தைப் பூசுவது அவரது உலகளாவிய தத்துவத்திற்கு முரணானது.

வள்ளுவர் நமக்குக் கற்றுக்கொடுத்தது "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற சமத்துவத்தை தான். வள்ளுவரை ஒரு குறிப்பிட்ட வண்ணத்திற்குள் அடைக்க நினைப்பது கடலை ஒரு குடத்திற்குள் அடைக்க நினைப்பதற்குச் சமம். அவர் உலக மக்கள் அனைவருக்கும் வழிகாட்டும் ஒரு பேரொளி. அவருக்குக் காவி பூசுவதும், அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயல்வதும் எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல.

அவரது உடைகளின் நிறத்தை மாற்றுவதை விடுத்து, அவரது குறள் காட்டும் நல்வழியில் நடக்க முயல்வதே அவருக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதை. வள்ளுவரை கலங்க படுத்தாதீர்கள்” என தெரிவித்துள்ளார்.

Read Entire Article