காவல் நிலையத்தில் ஆஜராகும் சீமான்.! திடீரென குவியும் நா.த.கவினர்: அலர்ட்டான ஆயுதப்படை.!

9 months ago 6
ARTICLE AD

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்  சீமான் மீதான பாலியல் புகார் தொடர்பாக, இன்று வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பபட்ட நிலையில், கட்சி பணி காரணமாக தருமபுரி சென்ற நிலையில், விமான மூலம் சென்னை வந்தார். இன்று இரவு 8 மணியளவில் ஆஜராவதாக சீமான் தெரிவித்துள்ளார்.

சீமானுக்கு சம்மன்:

சீமான் மீது, பிரபல நடிகை அளித்த பாலியல் புகாரில், நேற்று விசாரணாஇக்கு ஆஜராகுமாறு , வளசரவாக்கம் காவல்துறை தெரிவித்தது. ஆனால், கட்சி பணிகள் காரணமாக ஆஜராகவில்லை என சீமான் தெரிவித்தார்.

இதையடுத்து, இன்று ஆஜராகுமாறு, சென்னை நீளாங்கரையில் உள்ள சீமான் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. ஆனால், அந்த நோட்டீசை , சீமான் வீட்டீல் இருந்தவர்கள் கிழித்து, காவல்துறையினருடன் தள்ளு முள்ளுவில் ஈடுபட்டது, பெரும் சர்சசையை கிளப்பியது. இதையடுத்து, 2 பேரை காவல்துறையினர் கைது செய்து கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை பதிவு செய்தனர்.

இதையடுத்து, காவல்துறையின் செயலை கண்டித்த சீமான், நான் எங்கு ஓடி ஒளியவில்லை, கட்சி பணி காரணமாக் சென்றேன். நாளையும் ஆஜராக மாட்டேன் என்ன செய்வீர்கள் என தெரிவித்தார்.

ஆஜராகும் சீமான்:

இந்நிலையில், இன்று தருமபுரியில் கட்சி பணி காரணமாக சென்ற சீமான், அதை முடிவித்துவிட்டு சேலம் விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு வந்தடைந்தார். இதையடுத்து, சென்னை வளசரவாக்கத்தில் உள்ள காவல் நிலையத்தில் விசாரணைக்காக , இன்று இரவு 8 மணிக்கு ஆஜராகுவதாக , விமான நிலையத்தில் சீமான் தெரிவித்துள்ளார்.

இதனால், நாம் தமிழர் கட்சி தலைமையிடமிருந்து, கட்சியினருக்கு , வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகவும், பெண்கள பாசறைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால், நாதகவினர் பலர் கூடவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக, ஆயுதப்படை காவலர்கள் பலர் , வளசரவாக்கம் காவல் நிலையத்தில் குவிந்து, தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Also Read: சீமான் வீட்டிற்குச் சென்ற காவலரை நோக்கி துப்பாக்கி காட்டியவர் யார்? குவியும் நாதகவினர்.!

சீமான் மீதான வழக்கு:

கடந்த 2011 ஆம் ஆண்டு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக பிரபல நடிகை, தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தியதாக புகார் அளித்தார். ஆனால் சில நாட்களுக்கு வழக்கை வாபஸ் பெறுவதாகவும் வீடியோ வெளியிட்டிருந்தார். இதையடுத்து, கடந்த 2023 ஆம் ஆண்டும் , சீமானுக்கு எதிராக பாலியல் புகாரும், பணம் பறித்தாதாகவும் புகார் கொடுத்தார்

இதற்கிடையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், 2011 ஆம் ஆண்டு புகாரை ரத்து செய்யவேண்டும் என்று உயநீதிமன்றத்தில் மனு கொடுத்தார்.

இந்த வழக்கானது சில தினங்களுக்கு முன்பு,  சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.பல்வேறு பிரச்சனைகள் காரணமாகத்தான் நடிகையின் குடும்பத்தினர் சீமானை அணுகி உள்ளனர். சீமான்,  திருமணம் செய்து கொள்வதாக கூறி அவருடன் உறவு வைத்துள்ளார். அதேபோல் சட்டப்படி திருமணம் செய்து கொள்வோம் என்றும் கூறியிருக்கிறார்.  சீமானின் வற்புறுத்தலால்  ஏழு முறை கரு கலைப்பும் நடிகை செய்திருக்கிறார். அதேபோல் அவரிடம்  இருந்து பெரும் பண தொகையையும் சீமான் பெற்றுள்ளார் என்றும் சீமானுக்கு எதிராக நடிகையின் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

இந்த நிலையில் இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஏன் புகாரை திரும்ப பெற்றார் என்று கேள்வி எழுப்பினர், அரசியல் அழுத்தம் காரணமாக சீமான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, மன உளைச்சல் காராணமாகவே புகாரை திரும்ப பெற கடிதம் அனுப்பியதாக நடிகை கூறியுள்ளார்” என்று காவல்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.

வழக்கை திரும்ப பெறுவதாக புகார்தாரர் கூறினாலும் காவல்துறைக்கு பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க அதிகாரம் உள்ளது.  இதிலிருந்து மிரட்டல் காரணமாக தான்,புகாரை விஜயலட்சுமி திரும்ப பெற்றுள்ளார் என்பது தெளிவாகிறது என சென்னை உயர் நீதிமன்றம் கூறியது. இதையடுத்து, வழக்கை 12 வாரங்களுக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டார். இதையடுத்து, நீதிமன்றம் 12 வாரங்கள் காலக்கெடு விடுத்ததையடுத்து, வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்திய காவல்துறை, சீமானுக்கு நேரில் ஆஜராகுமாறு, வளசரவாக்கம் காவல்துறை  சம்மன் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் , இன்று மாலை சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜராக் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையி, ஆயுதப்படை காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Also Read: Gold Visa: கோல்டன் விசாவை அறிவித்த டிரம்ப்.! அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் குடியுரிமை பெறலாம்..ஆனாலும் ட்விஸ்ட்

Read Entire Article