கால்நடை விற்பனையாளர்களை பாதுகாக்க கோரி வழக்கு.. தேனி எஸ்.பி பதிலளிக்க உத்தரவு !

1 month ago 8
ARTICLE AD

உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை முறையாக நடைமுறைப்படுத்தவும் கால்நடை பாதுகாவலர்களிடமிருந்து கால்நடை விற்பனையாளர்களை பாதுகாக்கவும் உத்தரவிடக் கோரிய வழக்கு.

வழக்கு தொடர்பாக தமிழக கால்நடைத்துறை இயக்குனர், தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பதிலளிக்க மதுரை அமர்வு உத்தரவு.

பொதுநல வழக்கு தாக்கல்

தேனி உத்தமபுரத்தைச் சேர்ந்த சலீம் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், " வடமாநிலங்களில் கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகையில் கொண்டு செல்பவர்களை தாக்கும் நிகழ்வுகள் நடந்தன. இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் மாடுகளை நெருக்கமாக அடைத்துச் செல்வதை தவிர்க்கவும், காவல் கண்காணிப்பாளர் தரத்திற்கு குறையாத நோடல் அதிகாரிகளை நியமிக்கவும், மாடுகளை கொண்டு செல்லும் போது எதிர்கொள்ளப்படும் பிரச்னைகளை ஆய்வு செய்ய மாதாந்திரக் கூட்டங்கள் நடத்தவும் உத்தரவிட்டது.

மாடுகளை விற்பனை செய்வோரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மேலும், மாடுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு, காவல் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும், இவ்வழிகாட்டுதல்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. சரியான  நோடல் அலுவலர்கள் நியமிக்கப்படாததால் மாடுகளை விற்பனை செய்வோரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

காவல்துறை கண்காணிப்பாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

ஆகவே உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை முறையாக நடைமுறைப்படுத்தவும் கால்நடை பாதுகாவலர்களிடமிருந்து கால்நடைகளை விற்பனை செய்வோரை பாதுகாக்கவும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு, " வழக்கு தொடர்பாக தமிழக கால்நடைத்துறை இயக்குனர், தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

Read Entire Article