கானா பாடகர் என்றால் இளக்காரமா...யூத் பட மோனிஷா பாடல் சர்ச்சை..கென்னை வெளுக்கும் ரசிகர்கள்

2 weeks ago 2
ARTICLE AD

யூத் படத்தில் இடம்பெற்றுள்ள 'நான் ஆசபட்ட பொண்ணு பேரு மோனிஷா' பாடல் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளதாக பாடலை பாடிய கானா பாடகர் தினேஷ் குற்றம்சாட்டியிருந்த நிலையில் இந்த குற்றசாட்டிற்கு  தற்போது படக்குழு விளக்கமளித்துள்ளது . பாடலின் உரிமையுள்ள நிறுவனத்திடம் முறையான அனுமதி பெற்றபின்னரே பாடலை பயன்படுத்தியதாக யூத் படக்குழு தெரிவித்துள்ளது

கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ள யூத் திரைப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.  இப்படம் 5  நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ25 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இயக்குநராகவும் நாயகனாகவும் கென் ரசிகர்களை கவர்ந்துள்ளார். சிம்பு , சூர்யா , கார்த்தி என முன்னணி நட்சத்திரங்கள் யூத் படக்குழுவை நேரில் சந்தித்து பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்கள்.

மோனிஷா பாடல் சர்ச்சை

யூத் படத்தில் பிரபல கானா பாடலான 'நான் ஆசபட்ட பொண்ணு பேரு மோனிஷா ' பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. 12 ஆண்டுகளுக்கு முன்  இந்த பாடலை கானா பாடகர் தினேஷ் உருவாக்கினார். டிவோ நிறுவனம் இந்த பாடலை ஆல்பம் பாடலாக வெளியிட்டுள்ளது. தனது அனுமதியில்லாமல் மோனிஷா பாடலை யூத் படத்தில் பயன்படுத்தியுள்ளதாகவும் இதனால் தான் மிகுந்த மன வருத்தத்தில் இருப்பதாக கானா பாடகர் தினேஷ் கடந்த சில தினங்கள் முன்பு குற்றம்சாட்டியிருந்தார்.

படக்குழு விளக்கம்

இந்த குற்றச்சாட்டிற்கு தற்போது யூத் படக்குழு தரப்பில் இருந்து விளக்கமளித்துள்ளது. மோனிஷா பாடலின் காப்புரிமை டிவோ நிறுவனத்திடம் இருப்பதாகவும். முறையாக பணம் கட்டி அந்த பாடலை படத்தில் பயண்படுத்தி இருப்பதாக யூத் படக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2002 ஆம் ஆண்டு விஜய் நடித்த யூத் படத்தின் டைட்டிலை கென் படத்திற்கு பயன்படுத்தியுள்ளார்கள். டைட்டிலை பயன்படுத்துவதற்கான அனுமதியையும் கட்டணம் செலுத்தி பெற்றுள்ளார்கள். அதே நேரம் படத்தில் சில விண்டேஜ் பாடல்களும் முறையாக அனுமதி பெற்று பயன்படுத்தப்பட்டுள்ளன. படத்தின் டைட்டில் கார்டில் விஜய் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்கள். அதே போல் மோனிஷா பாடலை பாடிய கானா பாடகர் தினேஷூக்கும் நன்றி தெரிவித்திருக்கலாம். கானா பாடல்களை சினிமாவில் பயண்படுத்திக்கொள்ளும் திரைத்துறையினர் அந்த பாடலை பாடியவர்களுக்கு  உரிய மரியாதை செலுத்த எப்போதும் தவறி வருகிறது . மோனிஷா பாடலுக்கான உரிமத்தை முறையாக பெற்றிருந்தாலும் அந்த பாடலை உருவாக்கிய கலைஞரை டைட்டில் கார்டில் படக்குழு கெளரவித்திருக்கலாம் .

Read Entire Article