காதலியுடன் ஏற்பட்ட சண்டை: 18 வயது இளைஞர் எடுத்த விபரீத முடிவு!

8 months ago 10
ARTICLE AD

காதலியுடன் ஏற்பட்ட சண்டையில் 18 வயது இளைஞன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் 18 வயது இளைஞர் ஒருவர் தனது காதலியுடன் ஏற்பட்ட தகராறில் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை மும்ப்ரா பகுதியில் உள்ள அம்ருத் நகரில் நடந்தது.

அந்த நபர் தனது காதலியுடன் மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தபோது, ​​இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. பின்னர் அவர் தனது வீட்டின் கூரையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது, மேலும் விபத்து மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் மேலும் தெரிவித்தனர்.

மும்ப்ரா காவல் நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், “மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தை சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர் தனது காதலியுடன் போனில் சண்டை போட்டுள்ளார். பின்னார் அதனால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது.

தகவலறிந்து சென்ற போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” எனத் தெரிவித்தார்.

மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

Read Entire Article