இயக்குநர் பாரதிராஜாவின் உடலை சென்னையிலேயே தகனம் செய்துவிட உறவினர்கள் கூறிய நிலையில் பாரதிராஜாவின் மகள் ஜனனி அதனை மறுத்துள்ளார்.

பாரதிராஜாவின் மறைவு தமிழ் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை தொடங்கி பாரதிராஜாவிற்கு அஞ்சலி செலுத்த பொதுமக்கள் மற்றும் திரைபிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் கிராமிய திரைப்படங்களை இயக்கிய முன்னோடியான பாரதிராஜா இன்னும் பல தலைமுறையினரால் நினைவுக்கூறப்படும் வகையில் சிறந்த படைப்புகளை வழங்கியிருக்கிறார். சில ஆண்டுகள் முன்புதான் பாரதிராஜாவின் மகன் மனோஜ் மாரடைபபில் காலமானார். பாரதிராஜாவின் மகள் ஜனனி மலேசியாவில் வசித்து வருகிறார்.

பாரதிராஜாவின் இறுதி ஆசை

பாரதிராஜாவின் உடலை சென்னையிலேயே தகனம் செய்ய வேண்டும் என அவரது உறவினர்கள் கோரிக்கை வைத்தனர் . ஆனால் இதனை அவரது மகள் ஜனனி மறுத்துவிட்டார். காரணம் மலேசியாவில் தனது மகள் வீட்டில் இருந்தபோது பாரதிராஜா தனது கடை ஆசையை தெரிவித்துவிட்டுள்ளார். தான் இறந்துவிட்டால் வத்தலகுண்டில் உள்ள தனது பண்ணைவீட்டில் தான் தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என பாரதிராஜா தெரிவித்துள்ளார். அவரது ஆசைப்படியே நாளை பாரதிராஜாவின் உடல் அவரது பண்ணை நிலத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

சென்னையில் அவரது உடல் இன்று இரவு 9 மணி வரை நல்லடகத்திற்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 3 மணியளவில் அவருக்கு இறுதிசடங்குகள் செய்யப்பட இருக்கின்றன.

பாரதிராஜா பற்றி

தேனி மாவட்டம் அல்லிநகரத்தைச் சேர்ந்தவர் பாரதிராஜா. 1941ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி பிறந்த அவர் தனது திரைப்பட வாழ்க்கையை கன்னட திரைப்பட இயக்குனர் புட்டண்ணா கனகலின் உதவியாளராகத் தொடங்கினார். தமிழ் சினிமாவில் 16 வயதினிலே படம் இயக்குநராக அறிமுகமானார். 1977 ஆம் ஆண்டு வெளியான இப்படம் மூலம் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானார். அதுவரை ஸ்டூடியோவுக்குள் முடங்கி கிடந்த தமிழ் சினிமாவை கிராமத்தின் எல்லை வரை அழைத்துச் சென்றவர் பாரதிராஜா. இதனாலேயே இவர் இயக்குநர் இமயம் என அழைக்கப்படுகிறார்.

16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, மண் வாசனை, முதல் மரியாதை, கடலோர கவிதைகள், வேதம் புதிது, கருத்தம்மா, கிழக்கு சீமையிலே ஆகியவை மிக மிக முக்கியமான படங்களாகும்.