‘காதலிக்கலனா போட்டோவை வெளியிடுவேன்’ - ஜிம் மாஸ்டரை தட்டி தூக்கிய போலீஸ்

5 months ago 4
ARTICLE AD

நண்பராக பழகி, காதலிக்க தொல்லை

சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த 28 வயது பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும் , அசோக் நகர் பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் சேர்ந்த போது , அதன் பயிற்சியாளர் ராஜ்குமார் என்பவர் நண்பராக பழகி , தனக்கு திருமணமாகி விவாகரத்து ஆகி தனியாக வசித்து வருவதாகவும் , அடிக்கடி பணம் தேவை என கேட்டு சிறிது சிறிதாக என ரூ.1.10 இலட்சம் பணம் பெற்றதாகவும் , பின்னர் வேலைக்கு செல்லும் போதும், வெளியில் செல்லும் போதும் காதலிக்கும் படி தொந்தரவு அளித்ததால் , அவரது செல்போன் எண் மற்றும் வாட்ஸ் அப் எண்ணை பிளாக் செய்தும் , ராஜ்குமார் நாம் இருவரும் நண்பராக பழகிய போது வாட்ஸ் அப்பில் அனுப்பிய புகைப்படங்கள் மற்றும் செய்திகளை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டுவதாகவும் , தனது பணத்தையும் திரும்ப தர முடியாது என மிரட்டுவதாகவும் , பாதிக்கப்பட்ட பெண் W-26 அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் (AWPS) புகார் கொடுத்ததின் பேரில், பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் (IT Act) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

W-26 அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து , இவ்வழக்கில் தொடர்புடைய மேற்கு சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த ராஜ்குமார், ( வயது 30 ) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து குற்றச் செயலுக்கு பயன்படுத்திய செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட ராஜ்குமார் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

காரில் வந்து கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன் பறித்துச் சென்ற 3 நபர்கள் கைது.

சென்னை சூளைமேடு நேரு தெருவில் வசித்து வரும் பாஸ்கர் ( வயது 55 ) என்பவர் கோயம்பேடு மார்க்கெட்டில் வாகன டோக்கன் கொடுக்கும் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 10.07.2025 அன்று இரவு கோயம்பேடு பூ மார்க்கெட் அருகே டோக்கன் கொடுத்து கொண்டிருந்த போது அங்கு மாருதி ஸ்விப்ட் காரில் வந்த 3  நபர்கள் மேற்படி பாஸ்கரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த  செல்போனை பறித்துக் கொண்டு காரில் தப்பிச் சென்றனர்.

இது குறித்து பாஸ்கர், K-10 கோயம்பேடு காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் கொடுத்ததின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். K-10 கோயம்பேடு காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து , மேற்படி செல்போன் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த தாமு ( வயது 28 ) , அசோக்பில்லர் பகுதியை சேர்ந்த சந்துரு ( வயது 22 ) , மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்த சஞ்ஜய் குமார் ( வயது 22 ) ஆகிய மூன்று நபர்களை கைது செய்தனர்.

அவர்களிமிருடந்து புகார் தாரரின் செல்போன்  மீட்கப்பட்டு, குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 கார் மற்றும் 1 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் கைது செய்யப்பட்ட தாமு மீது ஏற்கனவே ஒரு வழிப்பறி வழக்கு உள்ளது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட மூவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Read Entire Article