காதலாக மாறிய கோவில் பழக்கம் ; 37 வயது பெண்ணுடன் 22 வயது இளைஞர் திருமணம் !!

1 month ago 8
ARTICLE AD

உடல் நல குறைவு காரணமாக கணவர் உயிரிழப்பு

கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியை சேர்ந்தவர் 37 வயதுடைய கவிதா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுந்தர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கு கடந்த 16 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் 14 வயதில் ஒரு மகன் உள்ளார். கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு ராஜேஷுக்கு உடல்நல குறைபாடு ஏற்பட்டு உயிரிழந்தார்.

எனவே கணவரை இழந்த கவிதா தனது 14 வயது மகனுடன் அவரது பெற்றோர் வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்திருக்கிறார். அப்போது வாரம் தோறும் வியாழக்கிழமை அவரது வீட்டிற்கு அருகில் உள்ள கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்த நிலையில் கவிதாவிற்கு 22 வயதுடைய பாஸ்கர் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஒரு வருட காதல்

இருவரும் அடிக்கடி கோவிலில் சந்தித்தது பேசி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது காதலாக மாறியுள்ளது. கவிதா தனக்கு திருமணமாகி 14 வயதில் மகன் இருப்பதையும் தனது வயதினையும் வெளிப்படையாக கூறியதாக சொல்லபடுகிறது. இதனை ஏற்றுக் கொண்ட பாஸ்கர் கவிதாவை ஒரு வருடமாக காதலித்து வந்திருக்கிறார்.

திருமணத்திற்கு பிறகு தானே கவிதாவின் மகனை பார்த்து கொள்கிறேன் என்றும் அனைவரும் ஒன்றாக இருக்கலாம் எனவும் கூறியுள்ளார். இதற்கிடையில் கவிதாவின் தந்தை மல்லிகார்ஜுனா தனது உறவினர் ஒருவருக்கு கவிதாவை இரண்டாவது திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்து வந்துள்ளார்.

எனவே பாஸ்கரை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொள்ள நினைத்த கவிதா 14 வயது மகனை விட்டு பாஸ்கருடன் சென்றுள்ளார். தொடர்ந்து இருவரும் ராமனஹள்ளி பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டு அதே பகுதியில் வீடு எடுத்து வசித்து வருகின்றனர்.

22 வயது வாலிபருடன் திருமணம்

மகளை காணவில்லை என தேடி வந்த கவிதாவின் தந்தை அவர் 22 வயது வாலிபரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வரும் தகவல் அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் தனது உறவினர்களுடன் கவிதாவின் வீட்டிற்கு சென்று தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்த நிலையில் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என பாஸ்கர் மற்றும் கவிதா ராமனஹள்ளி போலீசில் தஞ்சமடைந்துள்ளனர்.

Read Entire Article