காணும் பொங்கல் ; சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம் !! முழு விவரம் இதோ !!

2 months ago 9
ARTICLE AD

காணும் பொங்கல் விடுமுறை - போக்குவரத்து மாற்றம்

காணும் பொங்கல் கொண்டாட்டத்தினை முன்னிட்டு இன்று (சனிக்கிழமை) சென்னையில் அனைத்து சாலைகளிலும் குறிப்பாக காமராஜர் சாலையில் பெருந்திரளான மக்கள் கூடுவார்கள். இது தொடர்பாக காலை 11 மணி முதல் கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

1. பாரிமுனையிலிருந்து காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள், போர் நினைவுச் சின்னம் அருகே கொடி மர இல்ல சாலை வழியாகத் திருப்பி விடப்பட்டு, வாலாஜா முனை → அண்ணா சாலை → அண்ணா சிலை → ஸ்பென்சர் சந்திப்பு வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம் (சென்னை மாநகர பேருந்துகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது).

2. போர் நினைவுச் சின்னத்திலிருந்து கடற்கரை நோக்கி வரும் வாகனங்கள், பயணிகளை இறக்கி விட்டுத் திரும்பும் போது, ஆடம்ஸ் சந்திப்பில் இருந்து சுவாமி சிவானந்தா சாலை நோக்கி வாகனங்களை நிறுத்துவதற்காகத் திருப்பி விடப்படும்.

3. உழைப்பாளர் சிலை முதல் கண்ணகி சிலை வரையிலான சாலை ஒருவழிப் பாதையாக மாற்றப்படும். சென்னை மாநகர பேருந்துகள் உழைப்பாளர் சிலை சந்திப்பில் இருந்து வாலாஜா சாலை நோக்கி வலது புறம் திரும்ப அனுமதிக்கப்படாது.

4. உழைப்பாளர் சிலை நோக்கி செல்லும் சென்னை மாநகர பேருந்துகள், கண்ணகி சிலை சந்திப்பில் இருந்து பாரதி சாலை → பெல்ஸ் சாலை → வாலாஜா சாலை → அண்ணா சிலை வழியாகத் தங்கள் இலக்கை அடையத் திருப்பி விடப்படும்.

5. காந்தி சிலையிலிருந்து கண்ணகி சிலை நோக்கி வாகனங்கள் (சென்னை மாநகர பேருந்துகளைத் தவிர) அனுமதிக்கப்படாது அதற்கு பதிலாக, அவை ஆர்.கே. சாலை → மியூசிக் அகாடமி சந்திப்பு → டி.டி.கே. சாலை → ஜி.ஆர்.எச். முனை → மணிகூண்டு → ஜி.பி. சாலை → அண்ணா சாலை வழியாகத் தங்கள் இலக்கை அடையத் திருப்பி விடப்படும்.

6. விக்டோரியா ஹாஸ்டல் சாலை மற்றும் பெல்ஸ் சாலை ஆகியவை பாரதி சாலை சந்திப்பிலிருந்து ஒருவழிப் பாதையாக மாற்றப்படும், மேலும் வாகனங்கள் வாலாஜா சாலை சந்திப்பிலிருந்து அனுமதிக்கப்படாது.

7. பாரதி சாலையில் கண்ணகி சிலை நோக்கிச் செல்லும் வாகனங்கள், ரத்னா கபே சந்திப்பில் இருந்து திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை → வாலாஜா சாலை → அண்ணா சாலை வழியாகத் தங்கள் இலக்கை அடையத் திருப்பி விடப்படும்.

8. பெரியார் சிலை சந்திப்பில், கடற்கரைக்குச் செல்லும் வாகனங்கள் மட்டுமே சுவாமி சிவானந்தா சாலை நோக்கி அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் அண்ணா சிலை → அண்ணா சாலை வழியாகத் தங்கள் இலக்கை அடையத் திருப்பி விடப்படும்.

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரால் வாகனங்களை நிறுத்துவதற்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் ;

1. போர்ஷோர் சாலை (பேருந்துகள் மற்றும் வணிக வாகனங்கள் தவிர அனைத்து வாகனங்களும்)

2. சென்னை பல்கலைக்கழகம்

3. சுவாமி சிவானந்தா சாலை

4. எம்.ஆர்.டி.எஸ் – சேப்பாக்கம்

5. லேடி வெலிங்டன் பள்ளி

6. இராணி மேரி மகளிர் கல்லூரி

7. சீனிவாசபுரம் லூப் சாலை (பேருந்துகள் மட்டும்)

8. பொதுப்பணி துறை மைதானம்

9. செயின்ட் பீட்ஸ் மைதானம்

10. அன்னை சத்யா நகர்

11. ஈ.வே.ரா சாலை, மருத்துவக் கல்லூரி மைதானம்

12. மாநில கல்லூரி.

வாகன ஒட்டுநர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Read Entire Article