சென்னை, தலைமைச் செயலகக் கோட்டை முகப்பில் நடைபெற்ற சுதந்திரத் திருநாள் விழாவில், துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருதினை காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த துளசிமதி முருகேசனுக்கு வழங்கப்பட்டது

காஞ்சிபுரம் பேட்மிட்டன் வீராங்கனை

பேட்மிண்டன் வீராங்கனையான துளசிமதி முருகேசன் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர். 2024 ஆம் ஆண்டு பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றைப் படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இவருக்கு மத்திய அரசு அர்ஜூனா விருது வழங்கி கவுரவித்துள்ளது.

கல்பனா சாவல் விருது

இந்தநிலையில் மாநில அரசு சார்பாக கல்பனா சாவ்ல் விருதும் இன்று வழங்கப்பட்டிருக்கிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துளசிமதி முருகேசனுக்கு கல்பனா சாவ்லின் விருது வழங்கிய கௌரவித்தார்.

யார் இந்த துளசிமதி முருகேசன்?

காஞ்சிபுரம், பழைய ரயில்வே சாலை பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகள் துளசிமதி(22). இவர் கால்நடை மருத்துவ அறிவியல் பயிற்று வருகிறார். மாற்றுத்திறனாளியான இவர் பேட்மிட்டன் போட்டியில் ஆர்வம் கொண்டவர். தன் வீட்டுக்கு அருகே உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சிறுவயதில் இருந்தே இவரது தந்தை இவருக்கு பயிற்சி அளித்தார். அரசு சார்பிலும் இவருக்கு விடுமுறை அளித்து பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்தனர். இந்நிலையில் இவர் ஆசிய அளவில் நடைபெற்ற பேட்டமிட்டன் பிரிவில் வெற்றி பெற்றார்.

இவர் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்று பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார். துளசிமதி முருகேசன் கடந்த 2022ம் ஆண்டு சீனாவின் நடைபெற்ற பாரா ஆசிய விளையாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்றார். அதில் SL3-SU5 மற்றும் SU5 ஆகிய பிரிவுகளில், தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் என பதக்கங்களை வென்றுள்ளார். சிறுவயதிலிருந்து தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் விளையாடும், துளசிமதி வீடு முழுவதும் பதக்கங்களால் நிறைந்து காணப்படுகிறது.