காச்சிக்குடா - மதுரை - நாகர்கோவில் சிறப்பு விரைவு ரயில்கள் சேவை நீட்டிப்பு. விபரம் இதோ

6 months ago 7
ARTICLE AD

மதுரை ரயில்வே கோட்டத்தில் வாடிப்பட்டி- கொடைரோடு ரயில் நிலையங்களிடையே பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் திண்டுக்கல் வழியாக தென்மாவட்ட ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. செங்கோட்டை- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் (16848) வரும் 6-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சி செல்லும். அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.

மயிலாடுதுறை - செங்கோட்டை (16847) மார்க்கத்தில்  8-ந் தேதி, 11-ந் தேதி ஆகிய நாட்களில் திருச்சியில் இருந்து காரைக்குடி, மானாமதுரை வழியாக விருதுநகர் வந்தடையும். புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை ரயில் நிலையங்களில் நின்று செல்லும். கன்னியாகுமரி- ஹவுரா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (12666) வரும் 7-ந் தேதி விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி செல்லும். மாதா வைஷ்ணவதேவி- கத்ரா வாராந்திர எக்ஸ்பிரஸ் (16788) வரும் 5-ந் தேதி, 12-ந் தேதிகளில் காரைக்குடி, மானாமதுரை வழியாக செல்லும். கோவை- நாகர்கோவில் ரயில் (16322) 6-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை திண்டுக்கல் வரை மட்டும் இயக்கப்படும்.  மதுரை- கச்சிக்குடா (07192) வாராந்திர எக்ஸ்பிரஸ் மதுரையில் இருந்து இன்றும் வரும் 11-ந் தேதியும் 1 மணிநேரம் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல்காச்சிக்குடா மற்றும் மதுரை, நாகர்கோவில் இடையே இயங்கும் சிறப்பு விரைவு ரயில்கள் ஜூலை மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. காச்சிக்குடா மற்றும் மதுரை, நாகர்கோவில் இடையே இயங்கும் சிறப்பு விரைவு ரயில்கள் ஜூலை மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது, காச்சிக்குடா – மதுரை சிறப்பு விரைவு ரயில் (எண்: 07191) வாரந்தோறும் திங்கட்கிழமைகள் மாலை 8.30 மணிக்கு காச்சிக்குடாவில் இருந்து புறப்படும்.

இந்த ரயில் ஜூன் 9 முதல் ஜூலை 28 வரை இயக்கப்படும். மதுரை – காச்சிக்குடா சிறப்பு விரைவு ரயில் (எண்: 07192)வாரந்தோறும் புதன்கிழமைகள் காலை 10.40 மணிக்கு மதுரையிலிருந்து புறப்படும். இந்த ரயில் ஜூன் 11 முதல் ஜூலை 30 வரை இயக்கப்படும். காச்சிக்குடா – நாகர்கோவில் சிறப்பு விரைவு ரயில் (எண்: 07435) வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகள் காலை 7.35 மணிக்கு காச்சிக்குடாவில் இருந்து புறப்படும் இந்த ரயில் ஜூன் 13 முதல் ஜூலை 11 வரை இயக்கப்படும்.

நாகர்கோவில் – காச்சிக்குடா சிறப்பு விரைவு ரயில் (எண்: 07436) வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகள் பிற்பகல் 12.30 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் இந்த ரயில் ஜூன் 15 முதல் ஜூலை 13 வரை இயக்கப்படும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளதாகவும், பயணிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு ரயில்வே  நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

Read Entire Article