களத்தில் பறந்த அனல்: ஆறு மணியுடன் அமைதியானது! 23-ல் இருக்கு வாக்குத் தீர்ப்பு

1 hour ago 1
ARTICLE AD

தஞ்சை மாவட்டத்தின் 8 தொகுதிகளிலும் கடந்த சில நாட்களாக நடைபெற்ற அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் அமைதியானது. நாளை மறுநாள் 23-ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் இன்று (ஏப்ரல் 21) மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

திமுக, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்குமுனைப் போட்டி நிலவும் இந்தத் தேர்தலில், இறுதிக்கட்டமாக இன்று அனைத்துத் தலைவர்களும் தங்களின் பலத்தை நிரூபிக்கும் வகையில் ொதுக்கூட்டம், ரோடு ஷோ, பிரச்சாரம், வாக்கு சேகரிப்பு என்று பல்வேறு விதத்திலும் அனல் பறக்க விட்டனர்.

தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியில் களம் காணும் திமுக வேட்பாளர் ராமநாதன் வல்லம் பகுதியில் இருந்து 500க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனத்தில் ஆதரவாளர்கள், கட்சி நிர்வாகிகள் புடை சூழ இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வல்லம் பகுதியில் உள்ள கிராமங்கள் வழியாக பிரச்சாரம் நடந்தது. பிரம்மாண்டமான வாக்கு சேகரிப்பு மக்களை வெகுவாக கவர்ந்தது. இதேபோல் பாஜக, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தங்களது இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர், திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி என 8 தொகுதிகளிலும் கடந்த ஒரு மாதமாக வெயிலுக்கு போட்டியாக வேட்பாளர்கள் களமிறங்கி பிரச்சாரத்திலும், வாக்கு சேகரிப்பிலும் வெகுவாக மும்முரம் காட்டி வந்தனர். தெருக்கள், முக்கிய சந்திப்புகளில் வேட்பாளர்களின் வாகனங்களும், அனல் பறந்த வாக்குறுதிகளும், பிரச்சாரமும் ஓய்ந்து புயலுக்கு பின் அமைதி என்ற நிலையில் இருக்கிறது. தேர்தல் திருவிழாவின் இறுதிக்கு வேட்பாளர்கள் வந்துள்ளனர். இன்னும் இரண்டே நாள்தான் வாக்குப்பதிவு நிறைவடைந்து மக்கள் அளித்த தீர்ப்பு மே மாதம் 4ம் தேதி தெரிய வந்து விடும்.

வரும் 23ம் தேதி காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்குகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் சுமார் 68,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அன்று ஒருநாள் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த ஜனநாயகத் தேர்தலின் முடிவுகள் மே 4 அன்று வெளியாகிறது. தமிழகத்தை யார் ஆளப்போகிறார்கள் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் அந்த மெகா அறிவிப்பு மே 4 அன்றே வெளியாக உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் அனல் பறந்த பிரச்சாரம் நிறைவடைந்து அமைதியாகி உள்ளது.

Read Entire Article