கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரம் !! போதையில் இளைஞர்கள் அட்டூழியம் !! காவலர் மீது தாக்குதல்

2 months ago 5
ARTICLE AD

கல்லூரி மாணவியிடம் சில்மிஷம்

சென்னை அம்பத்தூர் அடுத்த பட்டரைவாக்கம் பகுதியில் கூர்காவாக பணிபுரியும் நபரின் மகள் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். ரயில் மூலம் கல்லூரியில் இருந்து பட்டரைவாக்கம் ரயில் நிலையத்தில் வந்து இறங்கியுள்ளார்.

மாணவி , அங்கிருந்து வீட்டிற்கு சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த இளைஞர்கள் 3 பேர் தகாத முறையில் மாணவியிடம் நடந்து கொண்டதால் அதிர்ச்சியடைந்த மாணவி, அங்கிருந்து விலகிச் செல்ல முயன்றுள்ளார்.

காவலர் மீது தாக்குதல் நடத்திய போதை இளைஞர்கள்

மாணவியை கஞ்சா போதையில் இருந்து 3 பேரும் சரமாரியாக தாக்கத் தொடங்கினர். இதையடுத்து அங்கு ரோந்துப் பணியில் இருந்த தலைமை காவலர் ராதாகிருஷ்ணன் விசாரிக்க சென்ற போது , அவர் சட்டையைப் பிடித்து இழுத்து சாலையில் தள்ளி அவர் மீது கொடூர தாக்குதல் நடத்தி உள்ளனர்.

சிசிடிவி கேமிரா இல்லாத பகுதி

இதைப் பார்த்த பொது மக்கள் அங்கிருந்து அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். தலைமை காவலர் இளைஞர்கள் 3 பேரையும் மடக்கிப் பிடிக்க முயன்றார். ஆனால் போலீசாரை அந்த போதைக் கும்பல் கடுமையாக தாக்கி விட்டு தப்பிச் சென்றது. அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சிசிடிவி கேமரா இல்லாத இடத்தை நோட்டமிட்டு மர்ம கும்ப கும்பல் காவலர் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article