கலர் கலர் ஆடைகளின் திருவிழா..நியூயார்க்கில் நடைபெறும் மெட் காலா என்றால் என்ன ?

7 months ago 6
ARTICLE AD

மெட் காலா 2025

சர்வதேச ஃபேஷன் நிகழ்வான மெட் காலா இந்த ஆண்டு கோலாகலமாக நியுயார்க்கில் தொடங்கியுள்ளது. இந்த நிகழ்வில் ஹாலிவுட் திரை பிரபலங்கள் முதல் இந்திய நட்சத்திரங்கள் வரை பலர் கலந்துகொண்டுள்ளார்கள். பாலிவுட் நடிகர் ஷாருக் கான் , கியாரா அத்வானி , தில்ஜித் தோசஞ் ஆகியோர் இந்த ஆண்டு மெட் காலா நிகழ்வில் கலந்துகொண்டுளார்கள்.

மெட் காலா என்றால் என்ன

ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் நியூயார்க் நகரத்தில் நடக்கும் மிகப்பெரிய ஆடை கண்காட்சி நிகழ்ச்சி மெட் காலா. அமெரிக்காவின் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பு நிறுவனமான ' The Costume Institute of Metropolitan Museum of Art '   இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறது .உலகம் முழுவதிலும் இருக்கும் புகழ்பெற்ற பேஷன் டிசைனர்கள் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்படுகிறார்கள். ஆடை வடிவமைப்பாளர்கள் தங்களது ஆடைகளை நட்சத்திரங்களை மாடலாக வைத்து தங்களது ஆடைகளை காட்சிப் படுத்துகிறார்கள். முதன்மையாக மேற்கு நாடுகளுக்கானதாக இருந்த இந்த நிகழ்ச்சியில் சமீப காலமாக இந்திய திரை பிரபலங்களும் அதிகம் கலந்துகொள்கிறார்கள்.

இந்த ஆண்டின் தீம்

ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட தீம் இந்த நிகழ்விற்கு முடிவு செய்யப்படும். இதன் அடிப்படையில் பிரபலங்கள் தங்கள் ஆடைகளை வடிவமைக்க வேண்டும் என்பது கட்டாயம் . அந்த வகையில் இந்த ஆண்டு கருப்பினத்தவர்கள் மத்தியில் பிரபலமாக இருந்த Dandyism கலாச்சார அடிப்படையில் ஆடைகள் அணிய வேண்டும் என்பதே நிபந்தனை.

மெட் காலாவில் இந்திய நடிகர்கள்

SRK at the Met Gala 2025. The King didn’t just walk the carpet—he owned it. Bollywood royalty meets global fashion. Bow down. @iamsrk#MetGala2025 #ShahRukhKhan #Trending pic.twitter.com/mDAElgu4da
— Anumol (@allabout_anumol) May 6, 2025

பாலிவுட் நடிகர் ஷாருக் கான் இந்த ஆண்டும் மெட் காலா நிகழ்வில் கலந்துகொண்டுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சப்யாசாச்சி வடிவமைத்த கருப்பு நிற கோட் அணிந்து கையில் சிங்கம் பதித்த செங்கோல் ஏந்திய ஆடையை ஷாருக் கான் அணிந்துள்ளார். நடிகை கியாரா அத்வானி , பிரியங்கா சோப்ரா நிக் ஜோனஸ் ஆகியோரும் இந்த ஆண்டு மெட் காலாவில் கலந்துகொண்டுள்ளார்கள்.

Read Entire Article