கரூர்: ஸ்ரீ மாரியம்மன் மேள தாளங்கள் முழங்க சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா

1 year ago 6
ARTICLE AD

கரூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் இன்று சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா.

கரூரில் புகழ்பெற்ற மாரியம்மன் ஆலய வைகாசி திருவிழா கடந்த மாதம் கம்பம் போடும் நிகழ்வுடன் தொடர்ந்து 19 நாட்கள் நடைபெற்று வரும் நிலையில் முக்கிய நிகழ்வாக மாரியம்மன் கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி கடந்த 29.5.2024 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சியை முன்னிட்டு அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி திருவிழா கடந்த மாதம் கம்பம் போடும் நிகழ்வுடன் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் நாள்தோறும் மாரியம்மன் மற்றும் மாவடி ராமசுவாமி பல்வேறு வாகனத்தில் திருவீதி உலா காட்சி தருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று உற்சவர் மாரியம்மனும், உற்சவர் மாவடி ராமசுவாமியும் சிறப்பு அலங்காரத்தில் ஆலயத்தில் இருந்து மேள தாளங்கள் முழங்க புறப்பட்டு முக்கிய வீதியில் வழியாக திருவீதி உலா காட்சி தந்த பிறகு மீண்டும் ஆலயம் வந்தடைந்தனர்.

ஆலயம் வந்தடைந்த மாரியம்மன் மற்றும் மாவடி ராமசுவாமிக்கு ஆலயத்தின் பூசாரி மகா தீபாரதனை காட்டி பின்னர் பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கினார். தொடர்ந்து திருவீதி உலா சிறப்பாக நிறைவு பெற்றது. கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்று வரும் வைகாசி மாத திருவிழாவின் சுவாமி திருவீதி உலாவை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும் வருகின்ற வெள்ளிக்கிழமை மாரியம்மன் வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கருதப்படும் ஊஞ்சல் சேவை நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து கரூர் தேர் வீதி பகுதியில் இனிசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. என ஆலய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். கடந்து ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த வைகாசி மாத மாரியம்மன் திருவிழா இன்னும்  ஓரிரு  நாளில் நிறைவு பெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article