கரூர் கூட்ட நெரிசல்: முதல்வர் வழங்கும் அரசு வேலை தற்காலிகம் - உயர் நீதிமன்றம் உத்தரவு!

3 months ago 8
ARTICLE AD

கரூர் கூட்ட நெரிசலில் இறந்தோர் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதற்கு தடையில்லை என்றும், ஆனால், அந்த பணியின் நிரந்தரதன்மை நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் உத்தரவிட்டுள்ளது.

கரூர் கூட்ட நெரிசல்

கரூர் நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு அரசுப் பணி வழங்குவதற்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 18 பெண்கள் மற்றும் 13 ஆண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்நிலையில், கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 32 பேருக்கு அரசு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் விஜய் இன்று (ஜூலை 10) நேரில் வழங்க உள்ளார். இதற்காக அவர் கரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதலமைச்சர் விஜய், திருச்சிக்கு விமானம் மூலம் சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக கரூரை அடைவார். கரூர்–சேலம் பைபாஸ் சாலையில் உள்ள அட்லஸ் கலைஅரங்கம் மைதானத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதுடன், கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களில் தகுதியுடைய 32 பேருக்கு கருணை அடிப்படையிலான அரசு வேலை நியமன ஆணைகளையும் வழங்குகிறார். அதனைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் முதலமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைக்கு

இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு அரசுப் பணி வழங்குவதற்கு எதிராக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை செயலாளர் சீனி அஹமது நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தீரன் திருமுருகன் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்குகள் தொடர்ந்தனர். நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப்பணி வழங்குவதாக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டதா?

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பொருளாதார உதவி தேவைதானே? அரசு பணி வழங்குவதில் என்ன தவறு?

என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினர்.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,

கருணை அடிப்படையில் பணி வழங்கினால் சாட்சிகளை கலைக்கும் வாய்ப்பாக அமையும். ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு, தர்மபுரி பேருந்து எரிப்பு சம்பவங்களில் இறந்தோர் குடும்பத்திற்கு இழப்பீடு தரவில்லை; அரசுப் பணி வழங்கப்படவில்லை என வாதிட்டார். அனைத்து வாதங்களும் நிறைவடைந்ததையடுத்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். அதன்படி, கரூர் கூட்ட நெரிசலில் இறந்தோர் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதற்கு தடையில்லை; இன்று வழங்கப்படும் பணி நியமன ஆணை தற்காலிகமானதாகவே இருக்க வேண்டும். பணி நியமனம்  பெற்றவர்களுக்கு முதல் மாத ஊதியம் வழங்குவது குறித்து, வருகிற 21ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. அன்றுதான் முடிவு செய்யப்படும். ஆனால், அந்த பணியின் நிரந்தரதன்மை நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது எனக் கூறிய நீதிபதிகள் அரசுப்பணி வழங்குவதற்கு எதிரான வழக்கில் டி.என்.பி.எஸ்.சியை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு வழக்கை வரும் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Read Entire Article