கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆவணி மாத மகா சனி பிரதோஷ விழா நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் வெள்ளி காப்பு அலங்காரம்.

மாதம் தோறும் இரண்டு பிரதோஷங்கள் வரும் நிலையில் குறிப்பாக ஒரு சில மாதங்களில் வரும் பிரதோஷம் மிகவும் புகழ் பெற்றது. இந்த நிலையில் இன்று ஆவணி மாத மகா சனி பிரதோஷத்தை முன்னிட்டு பல்வேறு சிவாலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சவுந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருக்கும் நந்தி பகவானுக்கும் மூலவர் பசுபதீஸ்வரர் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதனை முன்னிட்டு நந்தி பகவானுக்கு எண்ணைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம் ,அபிஷேகப் பொடி, அரிசி மாவு, விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக மூலவர் பசுபதீஸ்வரர் பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் கல்யாண பசுபதீஸ்வரர் மகா தீபாராதனை காட்டப்பட்ட பிறகு ஆலயத்தில் வீற்றிருக்கும் நந்தி பகவானுக்கு ஆலயத்தில் சிவாச்சாரியார் உதிரி பூக்களால் நாமாவளிகள் கூறிய பிறகு சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பல்வேறு உபச்சாரங்கள் நடைபெற்ற பிறகு பஞ்ச கற்பூர ஆலாத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

அதை தொடர்ந்து அனைத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாதம் தோறும் இரண்டு பிரதோஷ நிகழ்வுகள் நடைபெற்று வரும் நிலையில் குறிப்பாக இன்று நடைபெற்ற ஆவணி மாத மகா சனி பிரதோஷத்தை முன்னிட்டு வழக்கத்தை விட அதிக அளவில் பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.

மேலும் கரூர் மாவட்டத்தில் பல்வேறு சிவாலயங்களில் ஆவணி மாத மகா பிரதோஷ விழா நடைபெற்ற நிலையில் கரூர் ஐந்து ரோடு அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா சமேத கோடீஸ்வரன் ஆலயத்திலும், நெரூர் அக்னீஸ்வரர் ஆலயத்திலும், உழவர் சந்தை அருகே உள்ள வஞ்சிலீஸ்வரர் ஆலயத்திலும், ஆண்டாள் கோவில் மேற்கு காசி விஸ்வநாதர் ஆலயத்திலும், சின்ன தாதம்பாளையம் அருணாச்சலேஸ்வரர் ஆலயத்திலும் ஆவணி மாத மகா சனி பிரதோஷ விழா சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.