கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் வீரராக்கியம் பகுதியில் 20க்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீர் சூழ்ந்து வீட்டிற்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், பொதுமக்கள் பாதிப்படைந்தனர். கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் இரண்டு ஜேசிபி இயந்திரம் மூலமாக தண்ணீரை வடிய வைத்து வருகின்றனர்.

கரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், மாநகரப் பகுதியில் இரவில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது. இந்நிலையில் அதிகாலை நேரத்தில் மாவட்டத்தின் மற்ற பகுதிகளான கிருஷ்ணராயபுரம், மாயனூர், புலியூர், வீரராக்கியம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.

கரூர் 3 சென்டி மீட்டர், கிருஷ்ணராயபுரம் 4 சென்டி மீட்டர், மாயனூர் 3 சென்டி மீட்டர் என மழை பதிவாகி பெய்துள்ளது. இந்நிலையில், இதில் வீரராக்கியம் பகுதியில் வடிகால் வசதி இல்லாததால் 20க்கும் மேற்பட்ட வீடுகளை மழை வெள்ளநீர் சூழ்ந்து வீட்டிற்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர்.

மழைக்காலங்களில் கனமழை பெய்தால் 10க்கும் மேற்பட்ட வீடுகள் தொடர்ந்து தண்ணீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தற்போது வீரராக்கியம் ஊராட்சி நிர்வாகம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பில், இரண்டு ஜேசிபி இயந்திரங்கள் மூலமாக தண்ணீரை அப்புறப்படுத்தி வருகின்றனர்.

இதே போல் கிருஷ்ணராயபுரம் அருகே செங்கல் தெற்கு களம் பகுதியில் இரண்டு வீடுகள் இரண்டு மாட்டு கொட்டகைகளில் தண்ணீர் புகுந்து இரண்டு ஆடுகளை மழை நீர் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. நிரந்தரமாக வடிகால் வசதி செய்து தந்து தண்ணீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.