முன்பிருந்த கால சூழலை விட தற்போது அனைவரும் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்க்க வேண்டுமென்ற ஆசையில் , சுற்றுலா செல்வதற்கு பல்வேறு இடங்களை தேர்வு செய்து சென்று வருகின்றனர். சுற்றிப்பார்க்க பல்வேறு இடங்கள் இருந்தாலும் நாம் வசிக்கும் இடங்களை சுற்றி அருகாமையிலேயே பல்வேறு இடங்கள் இருந்தும் நாம் அதனை கண்டும் காணாமல் இருந்து வருகிறோம். எங்கோ இருக்கும் இடத்தை நோக்கி பார்க்க பயணம் செய்கிறோம். இதில் பணம் , நேரம் உள்ளிட்டவற்றை விரயம் செய்து சுற்றுலா செல்ல விரும்புகிறோம்.

அப்படி தற்போது சொந்த மாவட்டத்திற்குள்ளேயே இயற்கைய தழுவி காட்சி தரும் பல்வேறு இடங்களை கொண்ட தேனி மாவட்டத்தில் பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளது. இதில் சுருளி அருவி, கும்பக்கரை அருவி , சின்ன சுருளி, உள்ளிட்ட பகுதிகளை பார்க்க அனைவரும் விரும்புவர். அந்த வகையில் சொந்த மாவட்டத்தில் உள்ளவர்களே குறைந்த செலவில் குடும்பத்துடன் சென்று வர வேண்டிய இடங்களில் ஒன்றுதான் வைகை அணை.

இதையும் படிங்க : https://tamil.abplive.com/news/india/1500-general-tickets-sold-every-hour-delayed-trains-mahakumbh-crowd-what-led-to-stampede-at-new-delhi-railway-station-215903

வருட ஆரம்பித்து விடும் தூரத்தில் தெரியும் மலையும், சாலையோரம் கடந்து செல்லும் மரங்களும் நம்மை குதுகலப்படுத்தும். பிரமாண்டமாக எழுந்து நின்று தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றும் வைகை அணை நம்மை வரவேற்கும். அங்கிருந்து பார்க்கும்போது அணையின் பிரமாண்டம் நம்மை வியக்க வைக்கும். நீரின் ஈர்ப்பதம் காற்றில் கலந்து நம் உடலை குளிர்விக்கும். அணையின் மேற்பகுதிக்கு சென்று தண்ணீர் தேங்கியிருக்கும் விஸ்தாரத்தை பார்ப்பதே மனதுக்கு உற்சாகத்தைத் தரும். அணையின் பிரமாண்டத்தை அழகான சூழலில் அமர்ந்து ரசிப்பதற்காக அணையின் இரண்டு பக்கமும் அப்போதே பூங்காக்கள் அமைக்கப்பட்டது.

இதையும் படிங்க : சென்னையில் கட்டுமான கழிவுகள் என்ன செய்யப்படுகிறது? பதில் தந்த மாநகராட்சி

ஆரம்பத்தில் மதுரை, தேனி மாவட்ட மக்கள் மட்டும் வந்து பார்த்துவிட்டு சென்ற வைகை அணை, வெளி மாநில சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் அளவுக்கு பிரபலமாகிவிட்டது. அணையின் இரண்டு கரைப் பகுதியிலும் அமைக்கப்பட்டிருக்கும் பூங்காவை இணைக்க நடுவில் பாலம் உள்ளது. பச்சை பசேல் என்றிருக்கும் பூங்காவில் குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் பொம்மைகள், சறுக்குகள், ஊஞ்சல் என அமைத்திருக்கிறார்கள்.

பூங்காவை சுற்றி வர குட்டி ரயிலும் உண்டு. விளையாடுவதற்கு பரந்த இடமும் உண்டு.அதே நேரம் பூங்கா அழகாகவும் அருமையாகவும் உள்ளது.வைகை அணை நீர் எந்தெந்த மாவட்டங்களுக்கு எப்படியெல்லாம் செல்கிறது என்பதை பூங்காவில் ஒரு மாடலாக செய்து வைத்திருப்பது அனைவரையும் ஈர்க்கும். மிருகங்கள், மனிதர்கள் என பல சிலைகளை வடித்து வைத்திருக்கிறார்கள்.

CM Stalin: ”பிளாக் மெயில் பண்றீங்களா” எங்க தனிகுணத்தை பாப்பீங்க - மத்திய அரசை எச்சரித்த சிஎம் ஸ்டாலின்

பூங்காவை ரசித்தபடி நடந்து சென்று அப்படியே மேட்டில் ஏறினால் வைகை அணையின் மேற்பகுதிக்கு சென்று விடலாம். நொறுக்குத்தீணி, சிற்றுண்டிகள் விற்கும் கடைகள் உள்ளது. ஆனாலும், சாப்பாடு கொண்டு செல்வது சிறப்பு. ஆண்டிப்பட்டியில் நல்ல ஹோட்டல்கள் உள்ளன. குழந்தைகள் மிகவும் கொண்டாட்டமாக இருப்பார்கள்.பொழுது சாயும் வரை அங்கு சுற்றி பார்த்துவிட்டு ஊர் திரும்பலாம். எப்படி செல்வது? மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து ஆண்டிப்பட்டிக்கு அதிகமான பேருந்துகள் உள்ளன. ஆண்டிப்பட்டியிலிருந்து வைகை அணைக்கு பேருந்துகளும், ஆட்டோக்களும் உள்ளன. சொந்த வாகனம் வைத்திருப்பவர்களுக்கு இன்னும் நேரம் குறையும்.