கமல் பண்ணா பாராட்டுவாங்க.. தவமாய் தவமிருந்து இப்படிதான் உருவானது.. மனம் திறந்த சேரன்

6 months ago 7
ARTICLE AD

இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பண்முகத்தன்மை கொண்டவர் சேரன். தமிழை தாண்டி பல்வேறு மொழிகளிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் ரமேஷ் கண்ணாவிடம் தனது சினிமா பயணம் குறித்து பகிர்ந்து கொண்ட அவர், தவமாய் தவமிருந்து படம் குறித்தும் அப்படம் உருவான விதம் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார். இதில், நடிகர் கமல்ஹாசன் குறித்தும் சுவாரஸ்யமாக பேசியிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

8 மணி நேரம் படம்

80களில் வந்த படங்களுக்கும் தற்போது வெளியாகும் படங்களுக்கும் நிறைய வித்தியாசம் பார்க்க முடிகிறது. கதை ஒன்றுதான் அதை எப்படி நாம் சொல்கிறோம் என்பதில் தான் இயக்குநர்கள் தோற்று போகிறார்கள். எங்க டைரக்டர் ரவிக்குமார் ஒரு சீன் எடுக்கும்போதே இது 10 நிமிடம், அந்த சீன் 5 நிமிஷம் என கூறிவிடுவார். படத்தின் நீளம் இருப்பதால் ரசிகர்கள் சோர்ந்து போவதை பார்க்க முடிகிறது. ஆனால், 2.30 மணி நேரம், 3 மணி நேரமாக இருந்தாலும் ரசிகர்கள் ரசிக்கும் வகையில் சொன்னால் அப்படம் வெற்றிதான் என சேரன் தெரிவித்தார். மேலும், பேசிய அவர், நான் இயக்கிய தவமாய் தவமிருந்து 8 மணி நேரமாக இருந்தது. இப்படத்திற்கு நான்தான் எடிட்டராக இருந்தேன். 8  மணி நேரத்தை கொஞ்சம் கொஞ்சமாக கத்தரிப்பு செய்து 5.30 மணி நேரமாக வைத்திருந்தேன்.

இயக்குநர்கள் பாராட்டு

படம் 5.30 மணி நேரம் என்ன செய்வது என்று தெரியவில்லை. பிறகு இப்படத்தை இயக்குநர் இமயங்களான பாலுமகேந்திரா, பாரதிராஜா, பாலசந்தர், தங்கர் பச்சான் ஆகியோரிடம் படத்தை போட்டு காண்பித்தேன். படத்தை பார்த்த 4 பேரும் 10 நிமிடம் அமைதியாக இருந்தார்கள். முதலில் மவுனத்தை கலைத்தது பாரதிராஜா சார்தான். அவர் தனது தொடையை தட்டி இப்படி ஒரு படம் எடுக்க முடியாமல் போனதற்கு வருத்தப்படுகிறேன்.  என்னமா எடுத்து வச்சிருக்கான் என பாராட்டினார். பாலசந்தரும், பாலுமகேந்திரா சாரும் என்னை கட்டி அணைத்தனர். ஆனால், தங்கர் பச்சான் வந்து என்னிடம் டேய் அங்கே அங்கே சதையா தொங்குது அதை மட்டும் பாத்துக்கனு சொல்லிட்டு போயிட்டாரு. இவர் என்ன சொல்றாரு புரியாம இருந்தேன் என சேரன் சிரித்தபடியே தெரிவித்தார்.

எடிட்டர் லெனின் லெஜண்ட் தான்

பிறகு பேசிய சேரன், உடனே நம்ம லெனின் சாருக்கு போன் பண்ணேன். வந்து படத்தை பார்த்து விட்டு இதை யார் எடிட் செய்தது என கேட்டார். தயங்கியபடியே நான் தான் என சொன்னதும், உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என கேட்டார். அப்புறம் பத்து நாளுக்கு இங்கே வராதீங்க நானே போண் பன்றேன் அப்போ வந்தா போதும் என கூறிவிட்டார். என்னடா இது இப்படி சொல்லிட்டாரே கொஞ்சம் தயக்கம் இருந்தாலும், எனது உதவி இயக்குநரிடம் அந்த 5.30 மணி நேரம் எடிட் புட்டேஜை சேவ் பண்ணி வச்சிரு. லெனின் சார் எடிட் பன்ற வெர்சனை பாத்துக்குறேன் என கூறிவிட்டேன். பிறகு 10 நாள் கழித்து கூப்பிட்டார். நான் போய் படத்தை பார்த்தேன். நான் வைத்த காட்சிகள் எதையும் மாத்தவில்லை. அதில், தேவையில்லாத காட்சிகளை மட்டும் எடிட் செய்திருந்தார். இப்போ 5.30 மணி நேரம் படம் 3.20 நிமிடமாக மாறியது. எடிட்டர் லெனில் லெஜண்ட். அவர் மாதிரி ஒரு மனிதரை பார்த்தது இல்லை. செம மனுசன் என சேரன் பாராட்டினார்.

டிஜிட்டலில் முதல் வெற்றி

தவமாய் தவமிருந்து திரைப்படம் டிஜிட்டலில் எடுத்த படம். இதற்கு முன்பு கமல் சார் மும்பை எக்ஸ்பிரஸ் எடுத்தார். ஆனால், அந்த படம் வெற்றி பெறவில்லை. டிஜிட்டலில் வெளியாகி ஹிட் ஆன முதல் படம் தவமாய் தவமிருந்து தான். இதை யாரும் சொல்லமாட்டார்கள். நானும் படத்தின் கேமராமேன் பி.ஆர்.பிரபுவும் சேர்ந்து முடிவெடுத்துதான் டிஜிட்டலில் எடுக்க முடிவெடுத்தோம். கமல் சார் எடுத்தால் பாராட்டுவார்கள். ஆனால், டிஜிட்டலில் வெற்றி பெற்ற படம் இதுதான் என சொல்லவில்லை என்ற வருத்தம் இருக்கிறது. பெரியவர்கள் செய்தால் ஆஹா ஓஹோ என்பார்கள். சிறியவர்கள் முயற்சி செய்தால் கண்டுகொள்ளமாட்டார்கள் என வேதனையுடன் சேரன் தெரிவித்திருந்தார்.

Read Entire Article