Weather Forecast Today (13-01-2025): "தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரை நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது."

ஆரஞ்சு அலர்ட்

நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இன்று காலை (13-01-2026) 10 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கன மழை எச்சரிக்கை

அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, கரூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, ராமநாதபுரம் திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. 10 மாவட்டங்களில் மாவட்டங்களில் இன்று (13-01-2026) காலை 10 மணி வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை நிலவரம்:

13-01-2026: தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

14-01-2026: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

15-01-2026 முதல் 18-01-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

குறைந்தபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

13-01-2026 முதல் 16-01-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3' செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்.

இயல்பு நிலையிலிருந்து குறைந்தபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:

13-01-2026 முதல் 16-01-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பாகவும், இயல்பை விட குறையவாகவும் இருக்கக்கூடும்.