கண்ணீரில் 4 பிள்ளைகள்: தந்தையின் உடலை அடக்கம் செய்யச் சேர்ந்து உதவிய கிராம மக்கள்!

3 weeks ago 3
ARTICLE AD

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே சங்கராபுரம் பகுதியில் தாய், தந்தையை இழந்த 4 பிள்ளைகள் தந்தையின் இறுதிச் சடங்கிற்குப் பணம் இன்றி தவித்த நிலையில் நெகிழ்ச்சியில் ஆழ்த்திய கிராம மக்கள்!

தந்தையின் இறுதிச் சடங்குகளை நடத்தக்கூடப் பணம் இன்றி தவித்த பிள்ளைகள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கமலக்கண்ணன் (46) உடல்நலக் குறைவால் கடந்த நவம்பர் 14-ஆம் தேதி காலமானார். தாய், தந்தையை இழந்த அவரது நான்கு பிள்ளைகள், தந்தையின் இறுதிச் சடங்குகளை நடத்தக்கூடப் பணம் இன்றி தவித்த நெகிழ்ச்சியான சம்பவம் கிராம மக்களைத் தாங்களாகவே முன்வந்து உதவினர்.

கமலக்கண்ணனுக்கு வசந்தா (40) என்ற மனைவியும், லாவண்யா (24), ரீனா (21), ரிஷிகா (17) ஆகிய மூன்று மகள்களும், அபினேஷ் (13) என்ற மகனும் இருந்தனர். இவர்களில் மனைவி வசந்தா, ஏழு ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார்.

வறுமை நிலைக்குத் தள்ளப்பட்ட குடும்பம்

அதன் பிறகு, கூலி வேலை செய்து வந்த கமலக்கண்ணன் தனது பிள்ளைகளை பள்ளி, கல்லூரியில் படிக்க வைத்து வந்துள்ளார். இந்த நிலையில், திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்குச் சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. கடந்த நான்கு மாதங்களாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாகத் தீவிர சிகிச்சை பெற்று வந்த கமலக்கண்ணன் வருமானம் இல்லாததால், அவரது குடும்பம் பெரும் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டது.

பாதியில் நின்றுபோன படிப்பு

பொறியியல் படித்து வந்த மகள் லாவண்யா கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் படிப்பைத் பாதியிலேயே நிறுத்தினார். அதேபோல், 8-ம் வகுப்பு படித்து வந்த ரீனா மற்றும் 10-ம் வகுப்பு படித்து வந்த ரிஷிகா ஆகியோரும் தங்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்தினார்கள். மகன் அபினேஷ் மட்டும் பூட்டையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

தந்தையின் உடலை அடக்கம் செய்யப் பணம் இல்லாமல் பரிதவிப்பு

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கமலக்கண்ணன் கடந்த நவம்பர் 14-ஆம் தேதி காலமானார். அவரது உடல் சொந்த ஊருக்குக் கொண்டு வரப்பட்டபோது, தாய், தந்தையை இழந்த அவரது நான்கு குழந்தைகளும் தந்தையின் உடலை அடக்கம் செய்யப் பணம் இல்லாமல் பரிதவித்தனர்.  உறவினர்களும் ஏழ்மையான நிலையில் இருந்ததால் அவர்களாலும் உதவ முடியவில்லை.

கிராம மக்களின் நெகிழ்வான செயல்

இதை நேரில் கண்ட கிராம மக்கள், அந்தக் குழந்தைகளின் நிலை கண்டு கலங்கிப் போனார்கள். மனிதாபிமானத்துடன் தாங்களாகவே முன்வந்து, வீடு வீடாகச் சென்று பணம் வசூலித்து, கமலக்கண்ணனின் உடலை முன்னின்று அடக்கம் செய்தனர். உடல்நலக்குறைவால் இறந்த தந்தையின் இறுதிச் சடங்குச் செலவுக்குப் பணம் இல்லாமல் குழந்தைகள் தவித்த நிலையில், கிராம மக்கள் தாங்களாகவே முன்வந்து உதவிய இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி அருகே சங்கராபுரம் பகுதியில் தாய், தந்தையை இழந்த 4 பிள்ளைகள் தந்தையின் இறுதிச் சடங்கிற்குப் பணம் இன்றி தவித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read Entire Article