ஓட்டு போட ஒட்டுமொத்தமாக காலியான சென்னை.! ஒரே நாளில் இத்தனை லட்சம் பேர் வெளியூர் பயணமா.?

1 hour ago 1
ARTICLE AD

வாக்களிக்க ஆர்வம் காட்டும் மக்கள்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. வாக்காளர் பட்டியலில் மொத்தம் 5,73,43,291 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், 2,80,30,658 ஆண் வாக்காளர்களும், 2,93,04,905 பெண் வாக்காளர்களும், 7.728 மூன்றாம் பாலின வாக்காளர்களும் இடம்பெற்றுள்ளனர். இதனிடையே பணி நிமித்தமாக வெளியூரில் வசித்து வரும் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்றும் வகையில் சொந்த ஊருக்கு கடந்த 3 நாட்களாக திரும்பி வருகிறார்கள். அந்த வகையில் சிறப்பு ரயில்கள், சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. இதன் மூலம் பல லட்சம் பேர் வெளியூர்களுக்கு பயணம் செய்து வருகிறார்கள்.

சிறப்பு பேருந்து இயக்கம்

அந்த வகையில் தமிழக அரசின் போக்குவரத்து கழகத்தின் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இது  தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 23/04/2026 அன்று  நடைபெறும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 22/04/2026 முதல் 23/04/26 காலை 06.00 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் 2,580 பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட்டதுடன், கூடுதலாக 4,158 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளன. ஆக மொத்தம் 6,738 பேருந்துகள் இயக்கப்பட்டு, 4,38,000  பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

6 .27 லட்சம் பேர் வெளியூர் பயணம்

21/04/2026 முதல் 23/04/26 காலை 06.00 மணி வரை, மொத்தம் 10,169  பேருந்துகள் இயக்கப்பட்டு, 6,27,000 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். மேலும் இச்சிறப்புப் பேருந்து  இயக்கம் இன்று நண்பகல் 13.00 மணி வரை தொடர்ந்து இயக்கப்படும். அத்துடன், இதுவரை சென்னையிலிருந்து 69,383 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டனர். 2026 -சட்டமன்றத்  தேர்தலை முன்னிட்டு , பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு, தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படும் என அன்புடன்  தெரிவித்துக்கொள்கிறோம்.

Read Entire Article