ஓடிடி-யில் ரிலீஸ் ஆகும் கூலி?.. ரஜினிக்கு வந்த புதிய சோதனை.. எப்போது தெரியுமா?

3 months ago 4
ARTICLE AD
<p><br />இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் கடந்த 14ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியானது. சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன், அமீர் கான், உபேந்திரா என பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்த நிலையில், படத்தை பெரிதும் எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர். பிரம்மாண்ட பொருட்செலவில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று முதல் 4 நாட்களில் நல்ல வரவேற்பை பெற்றது.&nbsp;</p> <p>&nbsp;கூலி திரைப்படம் இதுவரை 450 கோடி வசூலையே கடக்கவில்லை என்றும் அதனால் தான் சன் பிக்சர்ஸ் அமைதியாக இருப்பதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. மேலும், யு/ஏ சான்றிதழை பெற்று இந்த வாரம் மீண்டும் வசூல் வேட்டையை நடத்த சன் பிக்சர்ஸ் நீதிமன்றத்தை நாடியிருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. இப்படம் &nbsp;லோகேஷ் கனகராஜ் படமாகவோ அல்லது ரஜினி படமாகவோ இல்லை என்பது தான் ரசிகர்களின் வருத்தமாக இருக்கிறது. குறிப்பாக வெளிமாநிலங்களிலும் டல் அடிக்க தொடங்கிவிட்டதாம். கேரளாவில் இப்படம் தோல்வியடைந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.&nbsp;</p> <p>இந்நிலையில், கூலி திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கூலி படத்துடன் மோதிய வார் 2 திரைப்படம் 400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பாக்ஸ் ஆபிசில் பெரும் அடிவாங்கியது. 8 வாரங்களுக்கு பிறகு வெளியாகும் என்ற எதிர்பார்த்த நிலையில், கூலி, வார் 2 படங்களுமே ஏமாற்றத்தை அளித்துள்ளன. கூலி திரைப்படம் வரும் செப்டம்பர் 12 அல்லது 13ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் என கூறப்படுகிறது. அதேபான்று வார் 2 திரைப்படம் செப்டம்பரில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக வாய்ப்புள்ளது.</p>
Read Entire Article