ஒரே நாடு, ஒரே கணவர் திட்டமா? பாஜகவை வச்சு செய்த பகவந்த் மான்.. என்னங்க இப்படி சொல்லிட்டிங்க

6 months ago 7
ARTICLE AD

ஆபரேஷன் சிந்தூரை வைத்து பாஜக வாக்குகள் கேட்பதாகவும் அனைத்து வீடுகளுக்கும் அவர்கள் சிந்தூர் (குங்குமம்) அனுப்பி வைப்பதாக விமர்சித்த பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், இது என்ன ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? என சாடியுள்ளார்.

பாஜகவை வச்சு செய்த பகவந்த் மான்:

பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய பாதுகாப்பு படைகள் பதிலடி அளித்தது. இதனால், இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் ஏற்படும் வாய்ப்பு உருவானது. இரு நாடுகளும் கடுமையாக தாக்கி கொண்ட நிலையில், பேச்சுவார்த்தைக்கு பிறகு தற்போது பதற்றம் குறைந்துள்ளது.

இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூரை வைத்து பாஜக வாக்குகள் கேட்பதாக பஞ்சாப் முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான பகவந்த் மான் குற்றம்சாட்டியுள்ளார். அனைத்து வீடுகளுக்கும் பாஜக சிந்தூர் (குங்குமம்) அனுப்பி வைப்பதாக விமர்சித்த அவர், இது என்ன ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? என சாடியுள்ளார்.

என்னங்க இப்படி சொல்லிட்டிங்க?

இதுகுறித்து செய்தியாளர்களிடம் விரிவாக பேசியுள்ள அவர், "ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாஜக வாக்குகள் சேகரிக்கிறது. அவர்கள், 'சிந்தூர்' என்பதை நகைச்சுவையாக மாற்றிவிட்டனர். அவர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சிந்தூர் அனுப்புகிறார்கள். இப்போது என்ன (பிரதமர் நரேந்திர) மோடியின் பெயரில் 'சிந்தூர்' பயன்படுத்த போகிறீர்களா? இது என்ன 'ஒரு நாடு, ஒரு கணவர்' திட்டமா?" என்றார்.

முன்னதாக, இந்த விவகாரத்தில் பாஜகவை விமர்சித்த மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, "ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயர் அவர்களின் சிந்தனையில் உருவானது. இது அரசியல் நோக்கம் இருக்கிறது. பல கட்சி பிரதிநிதிகள் பல நாடுகளுக்குச் சென்று இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்கும் சமயத்தில்.,​நான் இதைச் சொல்ல விரும்பவில்லை. ஆனால், மேற்கு வங்கத்திற்கு அரசியல் பிரச்சார நோக்கத்துடன் வந்துள்ளார் பிரதமர்.

முதலில், அவர் (பிரதமர் மோடி) தன்னை டீ  விற்பனையாளர் என்று கூறிக்கொண்டார். பின்னர், தன்னை ஒரு காவலாளி என்று கூறிக்கொண்டார். இப்போது, அவர் சிந்தூர் விற்க இங்கு வந்துள்ளார்" என்றார்.

இந்தியில் சிந்தூர் என்றால் குங்குமம் என்று பொருள். இதை இந்து பெண்கள் திருமணத்தின் அடையாளமாக நெற்றியில் வைத்து கொள்வார்கள். இந்த பெயர், தங்கள் கண்களுக்கு முன்பாகவே தங்கள் கணவர்கள் கொடூரமாக கொல்லப்பட்ட பெண்களின் இழப்பைக் குறிக்கிறது.

Read Entire Article