உலகில் தனக்கென தனி சந்தையைக் கொண்டுள்ள கார் நிறுவனங்களில் ஒன்று மினி கூப்பர். இந்த காருக்கு இந்திய சந்தையில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. இவர்களது கார்களுக்கு இந்திய சந்தையிலும் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.

Second-gen Mini Cooper Electric:

இந்தியாவில் மின்சார கார்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மினி கூப்பர் நிறுவனம் இந்தியாவில் புதியதாக அறிமுகப்படுத்த உள்ள மின்சார கார் Second-gen Mini Cooper Electric. இந்த கார் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில், இந்த கார் வரும் நவம்பர் 27ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகமாகிறது.

ஒரே சார்ஜில் 402 கிலோமீட்டர் மைலேஜ்:

இந்த மின்சார ஹேட்ச்பேக் காரில் 54.2 கிலோமீட்டர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 402 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. இந்த கார் 218 எச்பி குதிரை ஆற்றல் கொண்டது. 330 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. இதில் வட்ட வடிவிலான ஓஎல்இடி ஸ்கிரின் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த கார் 6.7 நொடிகளில் 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் ஆற்றல் கொண்டது. அதிகபட்சமாக 170 கிலோமீட்டர் வேகத்தில் இந்த காரில் செல்லலாம். 95 கிலோவாட் டிசி ஃபாஸ்ட் சார்ஜிங்கில் 10 முதல் 80 சதவீதம் சார்ஜை 30 நிமிடங்களில் ஏற்றலாம்.

வசதிகள்:

இதன் முகப்பு விளக்குகளும் வட்டவடிவிலான எல்இடி விளக்குகளாக பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரில் பாதுகாப்பு அம்சத்தை கருத்தில் கொண்டு அடாஸ் வசதி பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரில் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. 16 முதல் 18 இன்ச் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. கான்ட்ராஸ்டிங் கூரை காரில் பொருத்தப்பட்டுள்ளது. எல்இடி டெயில் விளக்குகளும் இந்த காரில் இடம்பிடித்துள்ளது.

சிறப்புகள்:

இதன் ஓஎல்இடி தகவல்கள் அடங்கிய தொடுதிரை 9.45 இன்ச் அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல் வடிவமைக்கப்பட்டுள்ளது. சர்வதேச மாடலில் பனோரமிக் சன்ரூஃப், வயர்லஸ் போன் சார்ஜர், டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், ஹீட்டட் முன்பக்க இருக்கை உள்ளது. பாதுகாப்பு அம்சத்தை கருத்தில் கொண்டு 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, முன்பக்கம் மற்றும் பின்பக்க டிஸ்க் ப்ரேக்குகள், அடாஸ் வசதி உள்ளது.

புகழ்பெற்ற மினி கூப்பரின் இந்த Second-gen Mini Cooper Electric மின்சார காரின் விலை ரூபாய் 50 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.