ஒரு பக்கம் பிச்சை இன்னொரு பக்கம் தீவிரவாதமா! பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய பாஜக எம்பி

6 months ago 7
ARTICLE AD

ஒரு பக்கம் பாகிஸ்தான் பிச்சை எடுப்பதாகவும் மறுபக்கம் தீவிரவாதத்தை பரப்பி வருவதாகவும் பாஜக எம்.பி. குலாம் அலி கட்டானா லண்டனில் பேசியுள்ளார்.

"பிச்சை எடுக்கும் பாகிஸ்தான்"

ஆபரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகள் மத்தியில் ஆதரவு கோரும் வகையில் அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழு உலக நாடுகளுக்கு பயணம் செய்து வருகின்றன. அந்த வகையில், முன்னாள் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தலைமையில் லண்டனுக்கு சென்ற குழு பாகிஸ்தானுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறது.

அப்போது, லண்டன் வாழ் இந்தியர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பாஜக எம்.பி. குலாம் அலி கட்டானா, "பாகிஸ்தான் ஒரு பக்கம் பிச்சை எடுக்கிறது. மறுபுறம் பயங்கரவாதத்தைப் பரப்புகிறது. அந்தக் காலம் போய்விட்டது. நாங்கள் ஐரோப்பாவில் இருக்கிறோம்.

உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள எங்களின் மற்ற நண்பர்கள், பயங்கரவாதத்தை எவ்வாறு நசுக்குவது என்பது இந்தியாவுக்கு தெரியும் என்றும் யாருடைய மத்தியஸ்தமும் எங்களுக்குத் தேவையில்லை என்ற செய்தியை தெரிவித்து வருகிறார்கள்.

லண்டனை திரும்பி பார்க்க வைத்த பாஜக எம்பி:

நீங்கள் (வெளிநாடு வாழ் இந்தியர்கள்) எங்கள் தூதர்கள். நாங்கள் போராடுவோம். எங்கள் ராணுவம் அங்கு போராடும். இது ஒரு ராஜதந்திர போராட்டம். சமூக ஊடக போராட்டம் செய்ய வேண்டும். நாங்கள் போராடி எங்கள் கருத்தை முன்வைக்க வேண்டும்.

நாங்கள் அமைதியாக இருக்கிறோம். நான் என் குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும். இங்கு வந்துள்ள அனைவருக்கும் இந்த நாட்டின் மீது உற்சாகமும் அன்பும் இருக்கிறது. அதனால்தான் நீங்கள் கடந்த இரண்டு மணி நேரமாக இங்கே இருக்கிறீர்கள்.

பாகிஸ்தான் தனது தண்ணீரை நிறுத்திவிட்டதாகக் கூறுகிறது. நமது நதிகளின் 80% தண்ணீரை அவர்களுக்கு வழங்கியுள்ளோம். அதற்கு ஈடாக பாகிஸ்தான் நமக்கு ஊடுருவல், பயங்கரவாதம், போதைப்பொருள் ஆகியவற்றைக் கொடுத்துள்ளது.

ஜனநாயகத்தில் மக்களின் பங்களிப்பு அதிகரித்தது. காஷ்மீர் உலகின் அமைதியான பகுதியாக மாறியது. மக்கள் வாக்களிக்கத் தொடங்கினர். 370வது பிரிவுக்கு பிறகு சுற்றுலாவில் ஏற்றம், உள்கட்டமைப்பில் ஏற்றம் மற்றும் பெண்கள் தங்கள் உரிமைகளைப் பெற்றனர் என்பது பாகிஸ்தானை பதட்டப்படுத்தியது.

பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்படவில்லை. இது மட்டுமல்லாமல், பாகிஸ்தான் அங்கு ஜனநாயகத்தை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறது. ராணுவம் மேலாதிக்கத்தை வைத்திருக்க விரும்புகிறது. அதனால்தான் அவர்கள் இங்கு குழப்பத்தை ஏற்படுத்த விரும்புகிறார்கள்.

கடந்த 30 ஆண்டுகளில், 40,00 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். எத்தனை குழந்தைகள் அனாதைகளாக மாறினர். பலர் வெளியேறினர். குறிப்பாக காஷ்மீர் பண்டிதர்கள். அவர்கள் நமது வரலாற்று பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இருந்தனர்" என்றார்.

Read Entire Article