விழுப்புரம் : வேட்பு மனு தாக்களுக்கு முதல் நாளான இன்று நாம் தமிழர் கட்சி சார்பில் விழுப்புரம் தொகுதியில் மருத்துவர் அபிநயா ஆறு மாத கைக்குழந்தையுடம் சென்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கி ஏப்ரல் ஆறாம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதல் நாளான இன்று நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா தனது ஆறு மாத கைக்குழந்தையுடன் வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார். முன்னதாக விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மருத்துவர் அபிநயா. தனது ஆறு மாத கைக் குழந்தையுடன் சென்று தேர்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான முருகேசனிடம் வேட்பு மனுவை வழங்கினார்.

இதேபோன்று விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி தொகுதியில் சுபா சந்திரசேகர். திண்டிவனம் தொகுதியில் பேச்சிமுத்து. மயிலம் பகுதியில் விஜய்விக்ரம். வானூர் தொகுதியில் கரிகாலன். திருக்கோயிலூர் தொகுதியில் ஹமராஜன் ஆகியோர் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். செஞ்சி தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கிருஷ்ணன் இரண்டாம் தேதி வேட்பமான தாக்கல் செய்கிறார்.

விழுப்புரம் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர் சந்திப்பில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயா.,

ஐந்தாண்டு திமுக ஆட்சியில் மக்கள் விரக்தியடைந்துள்ளனர். விழுப்புரம் தொகுதியில் பல பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதை முன் வைத்து வாக்கு சேகரிப்போம். என் வெற்றி வாய்ப்பு உறுதியாக உள்ளது என நம்புகிறோம். திமுக மீதான அதிருப்தி காரணமாக எங்களுக்கு வாக்குகள் விழும். ஐந்தாண்டுக்கு ஒரு முறை திமுக வழக்கமாக வழங்கும் வாக்குறுதிகளை தான் தேர்தல் அறிக்கையாக கொடுத்துள்ளனர்.

இலவசம், மானியம், சலுகை இதைத் தவிர எந்த வாக்குறுதியும் இல்லை. மக்களுக்கு கவர்ச்சியானவற்றை இலவசமாக கொடுக்கிறார்கள். குடிநீர், மருத்துவம் ஆகிய அடிப்படை தேவைகளை நாங்கள் வந்தால் நிறைவேற்றுவோம். விழுப்புரம் தொகுதியில் குடிநீர், சுகாதாரம், சாலை வசதி மேம்படுத்தப்படும். திமுக எட்டாயிரம் வழங்குவோம் என அறிவித்துள்ள பெண்கள் மத்தியில் ஆதரவு இருந்தாலும் அதை சொல்லி நாங்கள் புரிய வைப்போம். வாக்கை விற்று கிடைக்கும் எட்டாயிரம் ரூபாயில் ஒரு மாதம் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்க முடியும். ஊடகங்கள் விஜய் பக்கம் திரும்பிவிட்டதால் எங்கள் போராட்டத்தை கண்டு கொள்வதில்லை. என தெரிவித்தார்.