வேடசந்தூர் ஒட்டன்சத்திரம் சாலையில் மது போதையில் ஒட்டிச்சென்ற கார் எதிரே வந்த லாரியின் மீது மோதியதில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

திண்டுக்கல் மாவட்டம் இடையகோட்டை அருகே உள்ள குறிகாரன் வலசு கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் தனது தோட்டத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில், வேடசந்தூர் அருகே உள்ள விருதைப்பட்டி கிராமத்தில் உள்ள இவரது உறவினர் வீட்டு துக்க நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார். துக்க நிகழ்வை முடித்துவிட்டு மீண்டும் தனது கிராமத்திற்கு வேடசந்தூரிலிருந்து ஒட்டன்சத்திரம் செல்லும் சாலையில் காரில் தனியாக சென்றுள்ளார்.

சமூக நீதி குறித்து பேச திமுகவிற்கு எள்ளு அளவிற்கு கூட தகுதி இல்லை - அன்புமணி ராமதாஸ்

கார் ஆத்து மேடு பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரியின் மீது பயங்கரமாக மோதியது. இதில் கார் தலை குப்புற கவிழ்ந்தது. காரின் உட்பகுதியில் படுகாயங்களுடன் சிக்கிக் கொண்டிருந்த சுப்பிரமணியை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Ajith Kumar: அழகாக பந்து வீசிய மகன் ஆத்விக்! அடிக்க நினைத்து மிஸ் செய்த அஜித்! - வைரலாகும் வீடியோ

மேலும், காரின் உள்ளே பார்த்தபோது மது பாட்டில்கள் மிச்சர் பாக்கெட் இருந்தது தெரியவந்தது. வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் போது சுப்பிரமணியிடம் ஒருவர் மது அருந்தி காரை ஓட்டினீர்களா என்று கேட்டபோது ஆமாம் ஒரு கட்டிங் சாப்பிட்டு தான் காரை ஓட்டினேன் என்று சுப்பிரமணி கூறினார்.

பள்ளிகளில் சாதிக்கு கடிவாளம் போட வேண்டும்; ஆனால்...” - சந்துரு குழு ஆய்வறிக்கையை எதிர்க்கும் அண்ணாமலை

மேலும் காயமடைந்த சுப்பிரமணியின் தலையில் 12 தையல்கள் போடப்பட்டு மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மது அருந்தி காரை இயக்கி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.