ஏழு கடல் ஏழு மலை ரீலிஸ் எப்போது?.. பெரிய ஹீரோக்களுடன் படம் பண்ணுவேன்.. இயக்குநர் ராம் பேட்டி

5 months ago 4
ARTICLE AD

இயக்குநர் ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, அஞ்சலி, கிரேஸி ஆண்டனி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "பறந்து போ". இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பறந்து போ படத்தின் டிரைலரில் மகனுக்கும், அப்பாவிற்கும் உள்ள சிக்கல்களை எடுத்துரைப்பது போன்று இருக்கிறது. இப்படத்தின் மூலம் மலையாள நடிகை கிரேஸி ஆண்டனி தமிழில் அறிமுகம் ஆகிறார். அதேபோன்று இயக்குநர் ராமின் ஆஸ்தான நடிகை அஞ்சலியும் முக்கிய இடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பறந்து போ படத்தின் அனுபவம் குறித்து ராம் மனம் திறந்து பேசியுள்ளார்.

தங்க மீன்கள் தான் பறந்து போ

பறந்து போ படத்தின் புரோமோஷனுக்காக பல்வேறு யூடியூப் தளங்களில் பேட்டியளித்து வரும் இயக்குநர் ராம் நீயா நானா கோபிநாத்தின் கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை அளித்துள்ளார். அப்போது பேசிய இயக்குநர் ராம், தங்க மீன்கள் தான் பறந்து போ, பறந்து போ என்பதும் தங்க மீன்களின் கதை தான். ஆனால், அதில் மகள், இதில் மகன். படத்தை பார்க்கும்போது தான் ரசிகர்களுக்கு புரிய வரும்.  ஸ்மார்ட்டாக இருக்கும் மகனின் ஏக்கத்தை தந்தை எவ்வாறு புரிந்துகொள்கிறார் என்பதை சொல்லும் படமாக இருக்கும் என தெரிவித்தார்.

என் படத்திற்கே நானே வியாபாரி

ஏன் நீங்iகள் பெரிய ஹீரோக்களை வைத்து படம் இயக்கவில்லை என கோபிநாத் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த இயக்குநர் ராம், தங்க மீன்கள் படம் முடிந்த பிறகு ஒரு ஹீரோவிடம் கதை சொன்னேன். அவருக்கும் பிடித்திருந்தது. நான் ரொம்ப காலதாமதம் செய்ததால் முடியாமல் போனது. எனக்கும் பெரிய ஹீரோக்களை வைத்து படம் பண்ண ஆசைதான். நான் இந்தமாதிரி படங்களை மட்டும் தான் இயக்குவேன் என்று சொல்லவில்லை. பெரிய ஹீரோக்களை வைத்து இதுபோன்ற படங்களை இயக்கும்போது விளம்பரம் தேவையில்லை, பக்கம் பக்கமாக பேச வேண்டிய அவசியம் இல்லை. ஆரம்பத்தில் இருந்தே எனது படத்திற்கு நானே வியாபாரியாக இருந்து வருகிறேன். எல்லா புரோமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு படத்தை வியாபாரம் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது என தெரிவித்தார்.

ஏழு கடல் ஏழு மலை ரிலீஸ் எப்போது?

ஏழு கடல் ஏழு மலை படம் ரிலீஸ் தேதி மாறி போனதற்கு என்ன காரணம் என்ற கேள்விக்கு பதில் அளித்த ராம், அந்த படத்தின் ரிலீஸ் தேதி மாறி போனதற்கு காரணம் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிதான். அப்படம் பெரிய ஸ்கேலில், எடுக்கப்பட்ட படம். பெரிய பட்ஜெட்டில் உருவாகியிருக்கிறது. அதற்கான பிசினஸ் ஓடிடி ரிலீஸ், டிஜிட்டல் ரைட்ஸ் விலையான பிறகே ஏழு கடல் ஏழு மலை படம் ரிலீஸ் ஆகும். பறந்து போ படத்திற்கு பிறகு 3 மாதத்தில் அப்படம் ரிலீஸ் ஆகும். ஏழு கடல் ஏழு மலை நினைத்ததை விட ஃபேண்டஸி படமாக இருக்கும். நானும் பெரிய அளவில் உழைப்பை செலுத்தியிருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

யுவனுடன் சண்டையா?

எனக்கும் அவருக்கும் நல்ல புரிதல் இருக்கிறது. பறந்து போ படத்தில் அவர்தான் பணியாற்ற வேண்டியிருந்தது. அவர் துபாயில் இருந்ததால் படத்திற்கான பின்னணி இசையை அவரே செய்தார். சந்தோஷ் தயாநிதி இசையமைத்தார். அவரும் எனக்கு நல்ல பிரதராகவும், என்னை புரிந்துகொண்ட ஆத்மாகவும் மாறிவிட்டார். யுவன் ரசிகர்கள் என்னை கண்டபடி திட்டுவதை பார்த்தேன், இதை அவரிடம் சொன்னேன். யுவனோடு அடுத்த படத்தில் பணியாற்றுவேன் என இயக்குநர் ராம் தெரிவித்தார்.

Read Entire Article