ஏடிஎம்-ல் விட்டுச்சென்றரூ. 47 ஆயிரம் பணம் - அடுத்து நடந்தது என்ன?

1 year ago 7
ARTICLE AD

ஏடிஎம் இயந்திரத்தில் டெபாசிட் செய்தபோது விட்டுச் சென்ற பணத்தை காவல்துறையினர் மூலம் உரிய நபரிடம் ஒப்படைத்த இரண்டு நபர்களுக்கு காவல்துறை சார்பாக பாராட்டு தெரிவித்தனர்.

Fengal Cyclone : வானிலையில் ஏற்பட்ட திடீர் டிவிஸ்ட்.. மீண்டும் உருவாகிறது ஃபெங்கல் புயல்.. வானிலை மையம் தகவல்

தேனி மாவட்டம் பெரியகுளம் காந்திநகர் அனுமார் கோவில் தெருவை சேர்ந்த சுந்தர். இவரது நண்பரான பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த தங்கபாண்டி ஆகிய இருவரும் பணம் எடுப்பதற்காக பெரியகுளம் தென்கரை வைகை அணை சாலையில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுக்க சென்று உள்ளனர். அப்போது ஏடிஎம் இயந்திரத்தில் ஏடிஎம் கார்டை செலுத்தி பணம் எடுக்க முயற்சி செய்தபோது, பணம் செலுத்தும் ஏடிஎம் இயந்திரத்தில் ஏற்கனவே யாரோ விட்டுச் சென்ற பணத்தை பார்த்து உடனடியாக எடுத்து எண்ணிப் பார்த்தபோது 47 ஆயிரத்து 500 ரூபாய் இருந்ததால் அப்பகுதியில் விசாரணை செய்தபோது எந்த ஒரு தகவலும் கிடைக்காததால்,

Schools Colleges Holiday: எங்கெல்லாம் மழை? - எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை - மொத்த லிஸ்ட் இதோ!

சுந்தர் மற்றும் தங்கப்பாண்டி இருவரும் பெரியகுளம் தென்கரை காவல் ஆய்வாளர் முத்து பிரேம்சந்த் அவர்களிடம் ஏடிஎம் சென்டரில் யாரோ பணத்தை விட்டு விட்டு சென்றுள்ளனர் எனவும், உரிய நபர்களிடம் பணத்தை ஒப்படைக்க வேண்டுமென கூறி  போலீசாரிடம் ருபாய் 47,500 ஒப்படைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்த போது பெரியகுளம் குருசடி தெருவை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் தனது மாமியார் மருத்துவ செலவுக்காக ஏடிஎம் இயந்திரத்தில் பணம் செலுத்தியுள்ள நிலையில் அப்போது அவர் ஏடிஎம் எந்திரத்தில் என்டர் பட்டனை சரியாக பிரஸ் பண்ணாததால் பணம் செல்லாமல் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்துள்ளது.

Fengal Update: கடைசியில் ஏமாற்றிய ஃபெங்கல்.! புயல் உருவாகாது என வானிலை மையம் அறிவிப்பு

இதனைத் தொடர்ந்து ராஜ் குமாரின் பணம் என்பதை உறுதி செய்யப்பட்டு பெரியகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் நல்லு 47 ஆயிரத்து 500 ரூபாயை ராஜ்குமாரிடம் ஒப்படைத்தார். மேலும் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த பணத்தை சுந்தர் மற்றும் தங்கபாண்டி இருவரும் எடுத்த பணத்திற்கு ஆசைப்படாமல் நேர்மையாக காவல்துறையினிடம் பணத்தை ஒப்படைத்த இரண்டு பேருக்கும் காவல்துறை சார்பாக சால்வை அணிவித்து துணை கண்காணிப்பாளர் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

Read Entire Article