திருப்பத்தூர்: நாட்றாம்பள்ளி அருகே பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எருது விடும் திருவிழா நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அடுத்த கல்நார்ச்சம்பட்டி கிராமத்தில் 125-ம் ஆண்டு மாபெரும் எருது விடும் திருவிழா ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் தலைமையில் நடைபெற்றது.

எருதுவிடும் திருவிழாவில், கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் ஆந்திரா, கர்நாடகா வெளி மாநிலங்களிலிருந்து 500க்கும் மேற்பட்ட காளைகள் மந்தையில் சீறிப்பாய்ந்து ஓடியது. மேலும் குறைந்த நொடியில் இலக்கை அடைந்த காளைக்கு முதல் பரிசாக ஒரு லட்ச ரூபாயும் இரண்டாவது பரிசாக 75,000 ரூபாயும், மூன்றாவது பரிசாக 65,000 ரூபாய் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட பரிசுகளை வழங்கினார்.

இந்த எருது விடும் திருவிழாவிற்கு புதுப்பேட்டை, கொத்தூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். எருது விடும் திருவிழாவில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்த எருது விடும் திருவிழாவின் போது 10க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.