எந்த மாநிலத்திற்கும் ஒரு சொட்டு தண்ணீர்கூட தர மாட்டோம்: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

10 months ago 7
ARTICLE AD

எந்த மாநிலத்துடனும் பகிர்ந்து கொள்வதற்கு, ஒரு சொட்டு தண்ணீர்கூட இல்லை என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், தீர்ப்பாயத்தில் தெரிவித்தார்.

ரவி-பியாஸ் தீர்ப்பாயம்:

பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக ரவி - பியாஸ் நீர் தீர்ப்பாயமானது, அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த தீர்ப்பாயத்தின்  கூட்டமானது நீதிபதி வினீத் சரண், தலைமையில் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் பேசிய ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மன் பேசியதாவது, “ எங்களிடம் எந்த மாநிலத்துடனும் பகிர்ந்து கொள்வதற்கு, உபரி நீர் இல்லை. இதனால் ஒரு சொட்டு தண்ணீரைக் கூட யாருடனும் பகிர்ந்து கொள்ளுவதற்கு இடமில்லை.சர்வதேச விதிமுறைகளின்படி தண்ணீர் கிடைப்பதை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்று மான் கூறினார்.

Also Read: Rekha Gupta: டெல்லி முதலமைச்சரானார் ரேகா குப்தா: யார் இவர்?.. 26 வருடங்களுக்கு பிறகு.!

நிலத்தடி நீர் எடுக்கப்படுகிறது

பஞ்சாபின் 76.5 சதவீத பகுதிகள்( Blocks )100 சதவீதத்துக்கும் அதிகமாக நிலத்தடி நீர் எடுக்கப்படும் நிலையில், ஹரியானாவில் 61.5 சதவீதம் மட்டுமே (143ல் 88)  எடுக்கப்படுகிறது.மாநிலத்தின் பெரும்பாலான நதி வளங்கள் வறண்டுவிட்டதால், அதன் பாசனத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அதிக நீர் தேவை.

பஞ்சாப்பில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது, பஞ்சாபில் குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், வேறு எந்த மாநிலத்துடனும் ஒரு சொட்டு தண்ணீரைக் கூட பகிர்ந்து கொள்வது என்ற கேள்விக்கு இடமில்லை.

"எங்களின் அடுத்த தலைமுறையினரின் உரிமைகளைப் பாதுகாப்பது இன்றியமையாதது. மக்களின் நலன்கள் எல்லா வகையிலும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய, பஞ்சாப் அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது. அதற்காக எதையும் விட்டுக் கொடுக்காது.

Also Read: Delhi CM Swearing In: டெல்லி முதல்வராக ரேகா குப்தா, 6 கேபினட் அமைச்சர்கள் பதவியேற்பு...

யமுனை நீர் பகிரப்படவில்லை:

இதற்கு முன்பு, ரவி மற்றும் பியாஸ் நதிகளைப் போலவே யமுனையும், பஞ்சாப் வழியாக பாய்ந்தது, ஆனால் பஞ்சாப் மற்றும் ஹரியானா இடையே நதி நீரை பங்கீடு செய்யும் போது, யமுனை நதிகள் பரிசீலிக்கப்படவில்லை. ஆனால், அதேசமயம் ரவி மற்றும் பியாஸ் நீர் பங்கீடுக்கு முறையாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது என்றும் முதல்வர் தீர்ப்பாயத்தில் தெரிவித்தார்.

ஹரியானா ரவி மற்றும் பியாஸ் நதிகளின் படுகை மாநிலம் அல்ல, ஆனால் பஞ்சாப் இந்த நதிகளின் நீரை ஹரியானாவுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது, ஹரியானாவுக்கு ராவி-பியாஸ் நீர் கிடைத்தால், யமுனை நீரையும் பஞ்சாப்புடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று மன் கூறினார்.

மேலும், பஞ்சாப் மாநிலம், ரவி நீர் அமைப்பின் தளத்தைப் பார்வையிட வந்துள்ள தீர்ப்பாய உறுப்பினர்களை, மாநில மக்களுக்கு நீதி வழங்குமாறு பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் வலியுறுத்தினார்.

Read Entire Article