<p>சென்னையில் , பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியதாவது “ மக்கள் திமுக அரசை பாராட்டுவதை சிலரால் தாங்கி கொள்ள முடியவில்லை. இதனால் விமர்சனங்களை சிலர் வைக்கின்றனர். இதை அரசியலாக்கி, வியாபார பொருளாக்க சிலர் முயற்சி செய்து வருகின்றனர். அதற்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. </p>
<p>சென்னையில்,கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் மழைநீர் வடிந்து விட்டது. வருங்காலத்தில் எந்த மழை வந்தாலும் சந்திக்க அரசு தயார் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். </p>