ஊரணிபுரத்தில் விமரிசையாக நடந்த விஸ்வகர்மா ஜெயந்தி விழா... 3 கி.மீ. அமைதிப் பேரணி

1 month ago 2
ARTICLE AD

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே ஊரணிபுரத்தில் தஞ்சை தெற்கு மாவட்ட தமிழ்நாடு விஸ்வகர்மா முன்னேற்ற சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா மற்றும் குடும்ப முப்பெரும் விழா விமரிசையாக நடைபெற்றது.

பாரம்பரிய தொழில்களை பாதுகாப்பதுடன், தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நலனை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் விழாவில் வலியுறுத்தப்பட்டன. தஞ்சை மாவட்டத் தலைவர் செல்வம் தலைமையில் நடைபெற்ற விழாவில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

3 கி.மீ. அமைதிப் பேரணி

விழாவையொட்டி ஊரணிபுரம் பகுதியில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவுக்கு அமைதிப் பேரணி நடைபெற்றது. இதில் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக பங்கேற்று, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த 3 கி.மீ. நடந்த அமைதிப் பேரணி மக்களின் கவனத்தை ஈர்த்தது என்பதும குறிப்பிடத்தக்கது.

பாரம்பரிய கைவினை மற்றும் தொழில் சார்ந்த சமூகங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும், தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்களை விரிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கருத்துகள் பேரணியின்போது வலியுறுத்தப்பட்டன.

புதிய நிர்வாகிகள் நியமனம்

தொடர்ந்து நடைபெற்ற விழாவில் சங்கத்தின் புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர். சங்கத்தின் வளர்ச்சிக்கும், உறுப்பினர்களின் நலனுக்கும் புதிய பொறுப்பாளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

விழாவின் ஒரு பகுதியாக சங்கத்தின் சார்பில் 250 உறுப்பினர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் உறுப்பினர்கள் மரக்கன்றுகளை பெற்றுக் கொண்டனர்.

இதனுடன் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. இதனால் விழாவில் பங்கேற்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

அரசு விடுமுறை கோரிக்கை

விழாவில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக விஸ்வகர்மா ஜெயந்தியை அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை முக்கியமாக முன்வைக்கப்பட்டது.

மேலும், ஐந்து தொழிலாளர்கள் இணைந்து தொழில் தொடங்கும் வகையில் தொழிற்சாலை அமைத்துத் தர வேண்டும் என்றும், நலவாரியம் மூலம் தொழிற்பயிற்சிகளை வழங்கி வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்தினர். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

மாணவர்களுக்கு கல்வி உதவி... தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம்!

விஸ்வகர்மா சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஏழை மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு திருமண உதவித்தொகை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

நீண்ட காலமாக பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின் எதிர்கால பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தகுதியானவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றும் அரசிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

விழாவில், பாரம்பரிய தொழில்களை பாதுகாப்பதுடன், அத்தொழில்களில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின் அடுத்த தலைமுறையினருக்கு கல்வி, பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. விஸ்வகர்மா ஜெயந்தி விழா, குடும்ப முப்பெரும் விழா, அமைதிப் பேரணி, புதிய நிர்வாகிகள் நியமனம், மரக்கன்றுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளுடன் விழா உற்சாகமாக நடைபெற்றது.

Read Entire Article