தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகராக உலா வந்தவர் நடிகர் கார்த்திக். அலைகள் ஓய்வதில்லை படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமான இவர் ரஜினி, கமலுக்கு இணையான கதாநாயகனாக உலா வந்தவர். இவர் படப்பிடிப்புக்கு முறையாத வராததும், பணத்தை வாங்கிக் கொண்டு திருப்பித் தராதது குறித்தும் இயக்குனர் பாரதி கண்ணன், தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, காஜா மைதீன் ஆகியோர் சமீபத்தில் அளித்த பேட்டி வைரலாகியது.

தொப்பியிலும், ஊட்டியிலும் கார்த்திக்:

நடிகர் கார்த்திக் தன்னுடைய ஏராளமான படங்களில் தொப்பி அணிந்து கொண்டு நடித்திருப்பார். மேலும், அவரது படங்களின் கதைக்களம் ஊட்டியில் அமைந்திருக்கும். அதற்கான காரணம் என்ன என்பதை ரோஜா கம்பைன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் தயாரிப்பாளர் காஜா மைதீன் விளக்கமாக கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, ஆனந்த பூங்காற்றே படத்தில் 25 நாட்கள் கார்த்திக்கிற்கு படப்பிடிப்பு. நடிகர் கார்த்திக் 22 லட்சம் கேட்டாரு. கொடுத்து ஒப்பந்தம் செய்துவிட்டோம். படப்பிடிப்பு பாலக்காட்டில் நடத்தினோம். நடிகர் கார்த்திக் வந்தார். ஆனந்த பூங்காற்றே பார்த்தால் கார்த்திக்கின் நடிப்பு அப்படி இருக்கும். 26 நாட்கள் அவரை அங்கிருந்து எஸ்கேப் ஆகவிடவில்லை.

உயிர் பிழைத்த கார்த்திக்:

காலையில் 5 மணிக்கு அவர் அறையில் உட்கார்ந்துவிடுவோம். ஜாலியாக வருவார். படப்பிடிப்பிற்கு வந்துவிட்டால் அவரைப் போன்ற ஒரு நடிகன் கிடையாது. அற்புதமான நடிகன். படப்பிடிப்பிற்கு வந்தால் ஒரே ஷாட்டில் நடிப்பார். ஆனந்த பூங்காற்றே படத்தில் ஒரு நொடி தவறியிருந்தால் அவரும் குழந்தையும் உயிரிழந்திருப்பார்கள். அப்படி குதித்திருப்பார்.

2 ஆயிரம் பேர் படப்பிடிப்பை அந்த காட்சியில் பார்த்தார்கள். 2 ஆயிரம் பேரும் அழுதார்கள். நடிப்புதான் ஆனால் மொத்த பேரும் அழுதார்கள். மகா கலைஞன். 20 நாள் முடித்தோம். ஒரே ஒரு பாடல் எடுக்க வேண்டும். வெயில் காலத்தில் அந்த பகுதி சாலை ஆகிவிடுவோம். மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி கடல் போல ஆகிவிடும். படகு எல்லாம் போகும். உண்மையில் வெயில் அதிகம்.

ஊட்டியை கேட்டது ஏன்?

அந்த சமயத்தில் இவர் தலையில் முன்னால் இருக்கும் முடியை அறுவை சிகிச்சை மூலம் நட்டிருந்தார். அது ஏதோ தவறாகிவிட்டது. அது அவரது உடலை பாதித்தது. வெயிலில் நின்றால் அவருக்கு வியர்த்த உடனே தலை பிரச்சினை வந்துவிடும். ஏசி-யிலே இருக்க வேண்டும். பாட்டு ஒருநாள் நடிச்சார். சார் இந்த பாடலை நாம் ஊட்டியில் வைத்துக் கொள்ளலாமா? என்று கேட்டார்.

உங்களுக்கு வியர்க்க கூடாது என்ற பாலக்காட்டில் இருந்த 10, 12 ஏர்கூலரை வாங்கி அவரைச் சுற்றி ஏர் கூலர் வைத்து பாடலை முடித்தோம். அவருடைய போர்ஷனை அற்புதமாக பண்ணியிருப்பார். கார்த்திக் சாரை ஈசியாக பேசிவிடுகிறோம். அதைவிட மோசமானவர்கள் சினிமாவில் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறியிருப்பார்.

நடிகர் கார்த்திக் படப்பிடிப்புக்கு முறையாக வரவில்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வந்தாலும், அவர் நடிக்க வந்த 18 ஆண்டுகளில் 100 படங்கள் நடித்தார். முறையாக படப்பிடிப்பிற்கு வராத ஒருவரால் 100 படங்கள் எப்படி நடிக்க முடியும்? என்று அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சரிந்த மார்க்கெட்:

நடிகர் கார்த்திக் தனது தலையில் முடியை 1995ம் ஆணடுக்கு பிறகே அவர் தலையில் முடி உதிர்வு இருந்ததால் அவர் அதற்கான சிகிச்சையை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த சிகிச்சை முறையாக பலன் அளிக்காத காரணத்தாலே அவர் 2000த்திற்கு பிறகு குறைவான படங்களில் நடிக்கத் தொடங்கினார். அவரது மார்க்கெட்டும் சரியத் தொடங்கியது.