தஞ்சாவூர்: மாநில அளவிலான உறைவாள் போட்டியில் தஞ்சாவூர் மாணவி மூன்று தக்கபத்தக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

கடினமாக உழைத்தவர்கள் தோல்வியை சந்தித்தாலும் வெற்றியை பெற்றே இருக்கின்றனர். கவனமும், நம்பிக்கையும், முயற்சியும், திறமையும் தோல்வி என்ற பெருங்கடல் சூழ்ந்து நின்றாலும் ஆழ்கடலில் உள்ள வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும். அந்த நாள் வெற்றியின் திருநாளாக அமையும் அமைகிறது. உயர பறக்க இறக்கைகள் மட்டும் போதாது. ஒரே ஒரு லட்சியம் என்ற குறிக்கோளை அடையும் தன்னம்பிக்கை என்ற உறுதி இருக்க வேண்டும்.

வெற்றியை நோக்கி முழு முயற்சி எடுத்து செல்பவர்களுக்கு ஊக்கமும், உறுதியும் அளிப்பவர்கள் கிடைத்து விட்டால் முடியாது என்ற காரியமும் சிறந்த சாதனையாக மாறிவிடும். வீழ்ச்சிகள் எப்போதும் நிரந்தரம் இல்லை. நாளைய எழுச்சிக்கு அதுதான் அஸ்திவாரங்கள். நடக்கும் தூரம் வெகு தொலைவு என்று நினைக்காமல் நடந்து கொண்டே இருந்தால் இலக்கு வந்துவிடும்.

நம் இலக்கை நோக்கிய பயணத்தில், தடைகள் பல கடக்கும். புதிதாக தடைகள் பல பிறக்கம். அவற்றை உடைத்து எறியும் சக்தி உனது முயற்சி என்ற உளியில் உள்ளது. நீங்கள் செய்யும் முயற்சிகள் வெற்றியை நோக்கி செல்லும் வழியை நோக்கி நகர்த்தும். புது திறமைகள் பல உதிக்கும். பல கைக் கொடுக்கும் இலக்கை நோக்கி தொடர்ந்து செல்பவர்களுக்கு வெற்றி என்ற மாலை தேடிவந்து விழுவது உறுதி. வெற்றி உன்னிடம் வந்து சேர்வது உறுதி.

போராட்டம் என்று தெரிந்தாலும் துணிந்து போராடுபவர்கள்தான் காலத்தையும் தாண்டிய சாதனையை செய்து உயர்ந்து நிற்கிறார்கள். சட்டைப் பையில் வைத்துக் கொண்டு தேடும் சாவி போன்றது தான் வாய்ப்புகளும். திறமை என்ற சட்டையை அணிந்து கொண்டு முயற்சி என்ற சாவியை எடுத்து விட்டால் வாய்ப்புகள் உங்கள் வீட்டை தேடி வரும். அந்த வகையில் தஞ்சாவூர் மாணவி அசத்தல் சாதனை செய்துள்ளார்.

மாநில அளவிலான உறைவாள் சண்டை போட்டியில் தஞ்சாவூர் மாணவி மூன்று தங்கப்பத்தக்கம் பெற்று அசத்தி உள்ளார். மாநில அளவிலான 16-வது உறைவாள் சண்டை போட்டி ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையத்தில் கடந்த டிச.5,6 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த போட்டிகளில் தமிழகத்தின் 24 மாவட்டங்களிலிருந்து 11,14,18 வயதுக்குட்பட்ட பிரிவுகளிலிருந்து 450 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

போட்டியை தமிழ்நாடு உறைவாள் சங்கத்தின் தலைவர் குணசேகரன் துவக்கி வைத்தார். தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் சையது முகமது பிலால் தலைமை வகித்தார். நிர்வாக அலுவலர் எஸ்.செல்வம், முன்னாள் பொருளாளர் ஜி.செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, உறைவாள் சங்கத்தின் ஆந்திர மாநில தலைவர் இஸ்மாயில், தீர்த்தகிரி மடாதிபதி பசுமை சித்தர், வீரப்பன் செங்கோட்டையன் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

இந்த போட்டியில் தஞ்சாவூர் மாவட்டம் சூரக்கோட்டையைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி எஸ்.தர்ஷினி, 18 வயதுக்குட்பட்டோர் பிரிவில் உறைவாள் கட்டா, குரூப் கட்டா, சண்டை பிரிவு ஆகிய மூன்று பிரிவுகளிலும் முதலிடம் பெற்று, தங்கப்பதக்கமும், கோப்பையும், சான்றிதழும் பெற்றார். இந்த போட்டிகளில் மூன்று தங்க பதக்கம் பெற்று சாதனை படைத்தையடுத்து, வரும் ஜன.5,6,7 ஆகிய தேதிகளில் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான உறைவாள் சண்டை போட்டியில் பங்கேற்க தர்ஷினி தகுதி பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.