பைக்ரேஸ், வீலிங் ஆபத்தான சாகச வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு - 6 பைக்குகள் பறிமுதல் - 14 ஆயிரம் அபராதம் விதிப்பு.

ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் Wheeling

இன்ஸ்டாகிராம் , பேஸ்புக் ரீல்சில் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் Wheeling, பைக்ரேஸ் மற்றும் ஹெல்மெட் அணியாமல் பைக்குகளை இயக்கி ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிட்ட 6 மதுரை ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ்( 20), அழகுமாணிக்கம்(20),/இளமனூர் பகுதியைச் சேர்ந்த மோகன் குமார்(20), வடக்கு மாசி வீதியைச் சேர்ந்த விவேக்(20) கருப்பாயூரணியைச் சேர்ந்த கபிலேஷ்( 19), தெற்கு வாசல் பகுதியைச் சேர்ந்த நந்தா ( 22 ) ஆகிய 6 பேர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 6 பைக்குகள் பறிமுதல் மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் 14 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் சாகசம்

பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் சாகசம் செய்து, சமூக வலைதளங்களில் அதனைப் பதிவிடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதுரை மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் எச்சரிக்கை.