உபியில் தடம்புரண்டு எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து.. ஆயிரக்கணக்கான பயணிகளின் நிலை..?

1 year ago 21
ARTICLE AD
சண்டிகரில் இருந்து திப்ருகர் நோக்கிச் சென்று கொண்டிருந்த சண்டிகர்- திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று பிற்பகல் 2 மணியளவில் உத்தரப்பிரதேசத்தின் கோண்டா என்ற பகுதியில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரயிலின் 10 முதல் 12 பெட்டிகள் திடீரென தடம் புரண்டன. இதில் 4 ஏசி பெட்டிகளும் அடங்கும். இந்த ரயில் பெட்டிகள் தடம் புரண்டதால் பயணிகள் இடிபாடுகளிடையே சிக்கிக் கொண்டனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு மாநில பேரிடர் மீட்பு படை, தீயணைப்புப் படையினர் விரைந்துள்ளனர். இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸ் வாகனங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
Read Entire Article